வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம்

 

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம்

கடந்த 2018 ஆம் ஆண்டு, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மேல் உள்ள குற்ற வழக்குகள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடமும், செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் ஐந்து நீதிபதிகளைக் கொண்ட சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது. அதனை முறையாக வேட்பாளர்கள் கடைபிடிக்கவிலை என்ற குற்றச்சாட்டு தொடர்கதையாகவே உள்ளது. எம்.எல்.ஏ உள்ளிட்ட எந்த பதவிக்குத் தேர்வு செய்யப் பட்டிருந்தாலும் குற்றப் பின்னணியை 48 மணி நேரத்திற்குள் இணையத் தளத்தில் வெளியிட வேண்டும் என்பதே விதியாகவே உள்ளது.

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை விளம்பரப்படுத்த வேண்டும் – தேர்தல் ஆணையம்

இந்நிலையில் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த விவரங்களை செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தல் குறித்து புதிய நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி குற்றப்பின்னணி குறித்த விவரங்களை அந்தந்த வேட்பாளர் மற்றும் கட்சிகள் 3 முறை விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல்களில் போட்டியிடும் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பிறகு குற்றப் பின்னணி விவரங்களை வேட்பாளர் மற்றும் கட்சிகள் வெளியிட வேண்டும் என்றும் 4 நாட்களுக்கு முன்பு ஒரு முறையும், 5 மற்றும் 8 ஆவது நாட்களுக்குள் 2 ஆவது முறையும், வாக்குப் பதிவுக்கு 2 நாள் முன்னதாக 3 ஆவது முறையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.