“கருப்பு பூஞ்சை”யை கட்டுப்படுத்த ,நீங்க எதை கட்டுப்படுத்தனும் தெரியுமா ?

 

“கருப்பு பூஞ்சை”யை கட்டுப்படுத்த ,நீங்க எதை கட்டுப்படுத்தனும் தெரியுமா ?

பூஞ்சை தொற்று காரணமாக கருப்பு பூஞ்சை அல்லது ‘மியூகோர்மைகோசிஸ்’ நோய் ஏற்படுகிறது. சுற்றுச்சூழலில் உள்ள பூஞ்சை வாயிலாக இந்த கருப்பு பூஞ்சை மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது. வெட்டு, தீக்காயங்கள் வாயிலாக தோலில் நுழையும் இந்த பூஞ்சை, பின் தோலின் மீது மேலும் பரவுகிறது.

“கருப்பு பூஞ்சை”யை கட்டுப்படுத்த ,நீங்க எதை கட்டுப்படுத்தனும் தெரியுமா ?

கட்டுப்படுத்தாத  சர்க்கரை நோய், அதிகளவில் ஸ்டீராய்டு எடுத்துக்கொள்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும் கொரோனா நோயாளிகளை இந்த கருப்பு பூஞ்சை எளிதில் தாக்கும்.

இந்த நோய் கொரோனா தொற்றுடன் இருக்கும் போதும் அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த பின்பும் தாக்கக்கூடியது. கடுமையான தலைவலி, கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல், திடீரென பார்வை குறைதல், சைனஸ் பிரச்சினை, மூக்கில் வலி, வாய் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கருப்பாக மாறுதல் போன்றவை, இதற்கு அறிகுறிகளாக உள்ளன.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக சமீபத்திய காலங்களில் மட்டுமே ஏராளமான  ‘கருப்பு பூஞ்சை’ பாதிப்புகள் பதிவாகின்றன, இது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. டெக்ஸாமெதாசோன் போன்ற ஸ்டெராய்டுகளும் நோயெதிர்ப்பு மண்டலத்தை முடக்குவதால், அதன் பயன்பாடு குறித்து கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இந்த பூஞ்சை தொற்று மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும்போது அவர்களை பாதிக்கிறது. இந்த தொற்று நுரையீரல் மற்றும் சைனஸை பாதிக்கிறது. திறந்த காயங்கள் அல்லது வெட்டுக்கள் மூலமாகவும் இந்த பூஞ்சை உடலில் நுழைகிறது.

கட்டுக்கடங்காத நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நீண்டகாலமாக தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) தங்கியிருக்கும் COVID-19 நோயாளிகளில் காணப்படும் மியூகோமைகோசிஸ் அல்லது ‘கருப்பு பூஞ்சை’ தொற்று, ஏற்படுகிறது .எனவே இதை கட்டுப்படுத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும் .