Home அரசியல் ஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் : ஓபிஎஸ் பேச்சு!

ஜெயலலிதாவுக்கு தீராத நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் : ஓபிஎஸ் பேச்சு!

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு கடமை பட்டிருப்பதாக தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் ஆயிரக் கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘கனத்த இதயத்தோடும் கண்ணீர் வழியும் விழிகளோடும் உங்கள் முன் நிற்கிறோம். அம்மா அவர்களுக்கு இந்த பிறவி அல்ல; ஏழேழு பிறவி எடுத்தாலும் அவருக்கு தீராத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். என்றென்றும் நினைவில் வைத்துக் கொண்டாடுகிறோம். அவர் வகுத்த திட்டங்களால் பயனடைந்த மக்கள், நன்றியை ஒரு போதும் மறக்க மாட்டர்கள். அதனால் தான் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அருகிலேயே ஜெயலலிதாவின் நினைவிடம் அமைத்திருக்கிறோம்’ என்று கூறினார்.

தொடர்ந்து, இது சாதாரண நினைவிடம் அல்ல; அம்மா அவர்களின் நினைவலைகள். அம்மா அவர்களுக்கு விசுவாசத் தொண்டர்கள் ஆகிய நாம் இதயத்தில் கோவில் கட்டி வைத்திருந்தோம். அது தான் இன்று நினைவிடமாக மாறியுள்ளது. தமிழகத்தில் தீய சக்திகள் தலையெடுத்து விடாமல் தடுக்க நாளும் நாளும் உழைக்க வேண்டுமென்று தொண்டர்களுக்கு பாடம் எடுக்கும் இடம் இது. மனித தெய்வம் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறது. மக்களால் நான் மக்களுக்காக நான் என்ற வீர முழக்கம் இங்கே கேட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், நீங்கள் எங்களோடு இல்லை என்று கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அம்மா தமிழக மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம். அதனால் தான் அம்மா ஆட்சி இன்னும் தொடருகிறது. என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்றும் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மதிமுகவுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது… 6 இடங்களில் போட்டி!

தொடக்கம் முதலே திமுக-மதிமுக இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முட்டிக்கொண்டு தான் இருந்தது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இரு குழுக்களும் இடையே கடும் விவாதம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே மதிமுக கூட்டணியிலிருந்து...

சென்னைக்கு பார்சலில் கடத்திய ரூ.4.75 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்!

சென்னை நெதர்லாந்தில் இருந்து சென்னைக்கு பார்சலில் கடத்திவரப்பட்ட 4.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நெதர்லாந்தில் இருந்து...

தேமுதிகவிற்கு 17 தொகுதியும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்க அதிமுக ஒப்புதல்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் அதிமுக தலைமை, தற்போது தொகுதி பங்கீட்டில் படு பிஸியாக இருக்கிறது. தன்னுடன் கூட்டணியில் இருக்கும் பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20...

“இப்படியே போனா காங்கிரஸ இழுத்து மூட வேண்டியது தான்” – மனம் நொந்து பேசிய ப. சிதம்பரம்!

ஒருகாலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட ஒரு கட்சி இன்று திமுகவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது என சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பழ. கருப்பையா கூறினார். இது எந்தளவுக்கு உண்மை என்பதே...
TopTamilNews