“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” : சலசலப்புக்கு மத்தியில் ஓபிஎஸ் ட்வீட்!

“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” : சலசலப்புக்கு மத்தியில் ஓபிஎஸ் ட்வீட்!

தமிழகத்தின் 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக  முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சிக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது.  இது அதிமுகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேற்று  ஆலோசனை நடத்தினர்.

“தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” : சலசலப்புக்கு மத்தியில் ஓபிஎஸ் ட்வீட்!

தற்போதுள்ள அரசியல் சூழலில் முதல்வர் பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு நிச்சயம் கட்சிக்குள் சலசலப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், “தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்க கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!” என்றும் “தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!” என்று பதிவிட்டுள்ளார்.