தேனி ஜக்கம்மாள் குளத்தில் குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்த துணை முதல்வர்

 

தேனி ஜக்கம்மாள் குளத்தில் குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்த துணை முதல்வர்

தேனி

தேனி அருகேயுள்ள ஜக்கம்மாள் குளத்தில் குடிமராமத்து பணிகளை இன்று துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு அருகே சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ஜக்கம்மாள் குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள லட்சுமிபுரம், குப்பிநாயக்கன்பட்டி, சோலை தேவன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான விவசாய கிணறுகள் பயனடைந்து வருகின்றன. இந்த நிலையில், மழைநீரை சேமிக்கும் விதமாக குளத்தினை தூர்வார வேண்டுமென அந்தபகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

தேனி ஜக்கம்மாள் குளத்தில் குடிமராமத்து பணிகளை தொடங்கிவைத்த துணை முதல்வர்

அதனை ஏற்று, இன்று குளத்தில் குடிமராமத்து பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கொடியசைத்து குடிமாரமத்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், எம்எல்ஏ ஜக்கையன் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.