துணை முதல்வர் பதவி..?- தி.மு.க.வில் புதிய தலைவலி

 

துணை முதல்வர் பதவி..?- தி.மு.க.வில் புதிய தலைவலி

அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தல் களப் பணிகளை முடுக்கி விட்ட நிலையில்,திமுக சார்பில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் பா.ம.கவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல் மேலிடத்திற்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

துணை முதல்வர் பதவி..?- தி.மு.க.வில் புதிய தலைவலி

பா.ம.கவின் ஓட்டு வங்கி தமிழகத்தில் தனித்து இருப்பதாகவும். அதனுடன் கூட்டணி வைப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பு சுலபமாகும் எனவும் அந்த சர்வே கூறியிருக்கிறதாம்.

துணை முதல்வர் பதவி..?- தி.மு.க.வில் புதிய தலைவலி

இதனையடுத்து கூட்டணி தொடர்பாக பா.ம.கவுடன் தொடர்பு கொண்டபோது பா.ம.க. தரப்பில் சில கோரிக்கைள் முன் வைக்கப்பட்டதாம். அதில் துணை முதல்வர் பதவி தங்கள் கட்சிக்கு தரப்படவேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது.

துணை முதல்வர் பதவி..?- தி.மு.க.வில் புதிய தலைவலி

இதனிடையே டெல்லி காங்கிரஸ் வட்டாரத்தில் இருந்தும் துணை முதல்வர் பதவி காங்கிரசுக்கு தரப்படுமா? எனக் கேள்விகள் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

துணை முதல்வர் பதவி..?- தி.மு.க.வில் புதிய தலைவலி

இத்ற்கிடையே துணை முதல்வர் பதவி திமுகவிற்குத்தான். அதில் மாற்றம் இருக்க கூடாது என திமுகவில் மேல்கட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ‘துணை முதல்வர் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை’ என ஸ்டாலின் தெரிவித்து இருப்பதாகச் சொல்கிறார்கள்.

– இர.சுபாஸ் சந்திர போஸ்