அமமுக ஆட்சிக்கு வந்தா பிரேமலதாவுக்கு ‘அந்த’ பதவியாமே? – டமார் என வெடித்த சீக்ரெட்!

 

அமமுக ஆட்சிக்கு வந்தா பிரேமலதாவுக்கு ‘அந்த’ பதவியாமே? – டமார் என வெடித்த சீக்ரெட்!

அதிக தொகுதிகள் ஒதுக்க முன்வராததால் அதிமுக கூட்டணியை விட்டு அதிரடியாக வெளியேறியது விஜயகாந்தின் தேமுதிக. தேமுதிகவின் இந்த முடிவு கட்சியின் கீழ்மட்ட தொண்டனிலிருந்து மேல்மட்ட நிர்வாகிகள் வரை ஒருவித மகிழ்ச்சியை உருவாக்கியது. அனைவரும் ஆர்ப்பரித்தனர். பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். தொண்டர்கள் பட்டாசு வெடிப்பார்கள் தலைமை தானே அடுத்தக்கட்ட நகர்வுகள் குறித்து யோசிக்க வேண்டும்.

அமமுக ஆட்சிக்கு வந்தா பிரேமலதாவுக்கு ‘அந்த’ பதவியாமே? – டமார் என வெடித்த சீக்ரெட்!

தேமுதிக வெளியேறிய அன்றே தொகுதிப் பங்கீடு அனைத்தையும் இறுதிசெய்து திமுக கேட் போட்டது. மீதமிருந்த மூன்று சாய்ஸ்கள். கமல் அல்லது டிடிவியுடன் இணைவது. இல்லையென்றால் தனித்துப் போட்டியிடுவது. கமல் அழைப்பு விடுத்த போதிலும் தேமுதிக இசைந்துகொடுக்கவில்லை. தினகரனுடன் முட்டிக்கொண்டது என்று தகவல் வெளியானது. அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கும் விதமாக தேமுதிக-அமமுக என்ற சக்திவாய்ந்த கூட்டணி உருவானது. 60 இடங்கள் ஒதுக்கவும் தினகரன் முன்வந்தார். அதற்கான வேட்பாளர் பட்டியலையும் தேமுதிக வெளியிட்டு விட்டது.

அமமுக ஆட்சிக்கு வந்தா பிரேமலதாவுக்கு ‘அந்த’ பதவியாமே? – டமார் என வெடித்த சீக்ரெட்!

தேமுதிக சீனியர் தினகரனுடன் கைகோர்க்காது என்று தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் கூறிவந்த நிலையில், இணைந்திருப்பது இயல்பாகவே சந்தேகத்தை எழுப்பியது. அதற்குக் காரணம் துணை முதல்வர் பதவி. தினகரனை முதல்வராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பிரேமலதாவை துணை முதல்வராக அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக தரப்பில் செக் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக என்று இரு பெரும் பலம் கொண்ட யானைகளை வீழ்த்த வேண்டுமென்றால் தேமுதிகவின் சேவை தேவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இறுதியில் தேமுதிகவின் நிபந்தனைக்கு தினகரன் கட்டுப்பட்டிருக்கிறார்.