பிள்ளையார் சுழி போடும் ஓபிஎஸ் : களைகட்டும் போடி!!

 

பிள்ளையார் சுழி போடும் ஓபிஎஸ் : களைகட்டும் போடி!!

தமிழகம் ,புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. சனி ,ஞாயிறு தவிர மார்ச் 19ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தரலாம். மார்ச் 20-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் வேட்புமனு திரும்பப் பெற மார்ச் 22ம் தேதி கடைசி நாளாகும்.மார்ச் 22ஆம் தேதி மாலையே தமிழகம், புதுச்சேரி காண இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் 5 பேருக்கு பதில் 3 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

பிள்ளையார் சுழி போடும் ஓபிஎஸ் : களைகட்டும் போடி!!

வேட்புமனு தாக்கலுக்கு 5க்கு பதில் இரண்டு வாகனங்களை மட்டுமே பயன்படுத்தவும் , எஸ்சி ,எஸ்டி பிரிவினருக்கு டெபாசிட் தொகை ரூ. 5 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ. 10,000 செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிள்ளையார் சுழி போடும் ஓபிஎஸ் : களைகட்டும் போடி!!

இந்நிலையில் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று மதியம் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்வதையொட்டி போடி தொகுதி களைகட்டியுள்ளது. இதனிடையே சேலம் வாழப்பாடியில் முதல்வர் பழனிசாமி இன்று மாலை சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஏற்காடு தொகுதி வேட்பாளர் மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் . முதல்வர் பழனிசாமி சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார்.