‘அதிமுக போடும் ஸ்கெட்ச் ‘ ஜெ.ஸ்டைலில் தினகரனுக்கு கல்தா!

 

‘அதிமுக போடும் ஸ்கெட்ச் ‘ ஜெ.ஸ்டைலில் தினகரனுக்கு கல்தா!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து பரிசீலிப்போம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

‘அதிமுக போடும் ஸ்கெட்ச் ‘ ஜெ.ஸ்டைலில் தினகரனுக்கு கல்தா!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல அதிரடி திருப்பங்கள் தமிழக அரசியல் களத்தில் அரங்கேறி வருகின்றன. குடுமி பிடி சண்டை போட்டவர்கள் ஒன்றாக இணைவதும்; பின்னி பிணைந்து இருந்தவர்கள் மாறி மாறி சேற்றை வாரி இறைப்பதும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற டயலாக்கையே நமக்கு நினைக்க தோன்றுகிறது. காங்கிரஸ் ஒரு ஆலமரம் அதை மோடி வித்தையால் அசைக்க கூட முடியாது என்று கூற குஷ்பு தற்போது பாஜகவில் வேட்பாளராக வலம்வருகிறார். இப்படி பல உதாரணங்கள் ஒவ்வொரு கட்சியிலும் சுட்டிக்காட்டும் அளவுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

‘அதிமுக போடும் ஸ்கெட்ச் ‘ ஜெ.ஸ்டைலில் தினகரனுக்கு கல்தா!

அப்படி தான் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஓபிஎஸ், சசிகலா அரசியலில் இருந்து விலகியது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. அவருக்கு நன்றி கடன்பட்டுளேன் என்று கூறிய பன்னீர்செல்வம், சசிகலா இணைப்பு குறித்த, சசிகலாதான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறாரே; அவர் முடிவு மாற்றப்பட்டால் இணைப்பு குறித்து பரிசீலிக்கலாம் என்றார். அத்துடன் மனிதாபிமான அடிப்படையில், கட்சியில் இப்போதுள்ள அமைப்பை, எங்களை ஏற்றுக்கொண்டால் இணைத்துக் கொள்வதை பரிசீலிக்கலாம் என்றும் தெளிவுற கூறியுள்ளார்.

‘அதிமுக போடும் ஸ்கெட்ச் ‘ ஜெ.ஸ்டைலில் தினகரனுக்கு கல்தா!

ஓபிஎஸ்சின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் முக்குலத்தோர் சமூகம் தான் என்று கூறப்படுகிறது. வன்னியர் இடஒதுக்கீட்டால் முக்குலத்தோர் சமூகம் அதிமுகவுக்கு எதிராக கிளம்பியுள்ளது. சசிகலா முக்குலத்தோர் பிரிவை சேர்ந்தவர் ; அத்துடன் அதே சமூகத்தை சேர்ந்த தினகரன் தனிக்கட்சியுடன் களத்தில் நிற்கிறார். இதனால் அதிமுகவுக்கான முக்குலத்தோர் வாக்குகள் அடிபடும் என்பது தேர்தல் வியூகமாக உள்ளது. சசிகலாவுக்கு துரோகம் செய்தவர் பழனிசாமி என திமுக ஆணித்தரமாக கூறி வரும் நிலையில் இதுவும் அதிமுக பின்னடைவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சசிகலாவை மீண்டும் இணைக்க ஓபிஎஸ் க்ரீன் சிக்னல் காட்டியுள்ளாராம். அதேசமயம் தினகரன் மற்றும் அமமுக கட்சிக்கும், அதிமுகவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஜெ.ஸ்டைலில் எழுதிவாங்கிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.