31ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்… குழந்தைகளின் உடல் நலத்தில் ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை.. டெல்லி அரசு

31ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்… குழந்தைகளின் உடல் நலத்தில் ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை.. டெல்லி அரசு

இம்மாதம் 31ம் தேதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டு இருக்கும் என கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 16ம் தேதியன்று நாடு முழுவதும் பள்ளிகளை மூட உத்தரவிட்டது. அது முதல் சுமார் கடந்த 6 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த சூழ்நிலையில் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பட்டால் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து தெலங்கானா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் இயங்க தொடங்கின.

31ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்… குழந்தைகளின் உடல் நலத்தில் ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை.. டெல்லி அரசு
மணீஷ் சிசோடியா

ஆனால் டெல்லி அரசு அப்போதும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கவில்லை. அக்டோபர் 5ம் தேதி வரை பள்ளிகளை தொடர்ந்து மூடியிருக்க உத்தரவிட்டது. தற்போது அதனை 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது. டெல்லி கல்வி துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா இது தொடர்பாக டிவிட்டரில், கொரோனா காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளும் அக்டோபர் 31ம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.

31ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்… குழந்தைகளின் உடல் நலத்தில் ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை.. டெல்லி அரசு
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஒரு பெற்றோராக நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்வதாக முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்தார். இந்த நேரத்தில் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்து எந்த ஆபத்தான முயற்சியையும் எடுப்பது பொருத்தமானதல்ல என பதிவு செய்து இருந்தார். நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்தை தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.