அரபிக்கடல், வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை… நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு!

அரபிக்கடல், வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை… நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு!

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, அரபிக் கடலில் உருவாகியுள்ள லேசான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாடு முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல், வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை… நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு!
வங்கக் கடலில் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளது.

அரபிக்கடல், வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை… நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு!
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் இமாச்சாலப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. இன்று மாலையில் இருந்து மழை தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் கழித்து மழை அளவு குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், குஜராத், கோவா, கொங்கன், மகாராஷ்டிரா பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடல், வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை… நாடு முழுவதும் மழைக்கு வாய்ப்பு!
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக ஒடிஷாவில் நான்கு நாட்களுக்கு சூறாவளியுடன் மழை பெய்யவும், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானாவில் கனமழை பெய்யவும், கர்நாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.