”மாதம் 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்ய – பணம் எடுக்க கட்டணம்” – பரோடா வங்கி அதிரடி !

 

”மாதம் 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்ய – பணம் எடுக்க கட்டணம்” – பரோடா வங்கி அதிரடி !

இனி மாதத்திற்கு மூன்று முறைக்கு மேல் வங்கி கணக்கில் மேற்கொள்ளப்படும் டெபாசிட் மற்றும் பணம் எடுப்பதற்கு கட்டணம் விதிக்கப்படும் என பரோடா வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேங்க் ஆப் பரோடா வங்கி, விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் மூன்று முறை டெபாசிட் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவர் என்றும் அதன் பிறகு செய்யப்படும் டெபாசிட்டுகள் ஒவ்வொன்றுக்கும் 50 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்று பரோடா வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயம், மூத்த குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள், சிறுநகரம் மற்றும் கிராமப்புற வங்கி கணக்குகளுக்கு 40 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும் என்றும் பரோடா வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயம், ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்குகளுக்கு இந்த கட்டணம் பொருந்தாது என வங்கி தெரிவித்துள்ளது.

”மாதம் 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்ய – பணம் எடுக்க கட்டணம்” – பரோடா வங்கி அதிரடி !

இதனிடையே, சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்து மாத த்திற்கு மூன்று முறை மட்டுமே கட்டணம் இன்றி பணம் எடுத்துக்கொள்ள இனி அனுமதிக்கப்படுவர் என பரோடா வங்கி தெரிவித்துள்ளது. மூன்று முறைக்கு மேல் செய்யப்படும் ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும், கணக்குகளுக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும் என வங்கி தெரிவித்துள்ளது.

”மாதம் 3 முறைக்கு மேல் டெபாசிட் செய்ய – பணம் எடுக்க கட்டணம்” – பரோடா வங்கி அதிரடி !

அதன்படி, மெட்ரோ மற்றும் பெருநகரப்பகுதிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மூன்று முறைக்கு மேல் பணம் எடுத்தால், ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 125 ரூபாய் கட்டணமும், சிறுநகரம் மற்றும் கிராமப்புற கணக்குகளுக்கு 100 ரூபாயும், நடப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு 150 ரூபாய் கட்டணமும் விதிக்கப்படும் என்று இந்த கட்டண விதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக பரோடா வங்கி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • எஸ். முத்துக்குமார்