விஜய்யை எம்ஜிஆர் போல சித்தரிப்பது தவறான அணுகுமுறை : அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

 

விஜய்யை எம்ஜிஆர் போல சித்தரிப்பது தவறான அணுகுமுறை  : அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

எம்ஜிஆர் போன்ற தலைவர்களை கிராபிக்ஸ் செய்து போஸ்டர் ஒட்டுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

விஜய்யை எம்ஜிஆர் போல சித்தரிப்பது தவறான அணுகுமுறை  : அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டும், அவரது மனைவி சங்கீதாவை ஜெயலலிதாவை போல சித்தரித்தும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் அடித்து வருகின்றனர். குறிப்பாக இந்த கலாச்சாரத்தை மதுரை விஜய் ரசிகர்கள் ஆரம்பித்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் இதை பாலோ செய்து வருகிறார்கள். இதற்கு எம்ஜிஆரின் ரசிகர்கள் மற்றும் அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர்கள் சிலரும் இதற்கு எதிராக கருத்து கூறி வருகின்றனர்.

விஜய்யை எம்ஜிஆர் போல சித்தரிப்பது தவறான அணுகுமுறை  : அமைச்சர் உதயகுமார் விமர்சனம்!

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், “கிராபிக்ஸ் உத்தியை பயன்படுத்தி விஜய்யை எம்ஜிஆர் போல சித்தரிப்பதை மக்கள் வெறுக்கிறார்கள். தலைவர்களைப் போல மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே அவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். எம்ஜிஆர் போன்ற தலைவர்களை கிராபிக்ஸ் செய்து போஸ்டர் ஒட்டுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை” என்றார்.