முருகன் காரை பின்தொடர அனுமதி மறுப்பு; பாஜகவினர் சாலை மறியல்

 

முருகன் காரை பின்தொடர அனுமதி மறுப்பு; பாஜகவினர் சாலை மறியல்

கோவை

கோவையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் காரை பின்தொடர்ந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவை மருதமலை முருகன் கோயிலில் இன்று கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயண் மற்றும் தமிழக பாஜக தலைவர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேல்பூஜையில் ஈடுபட்டனர்.

முருகன் காரை பின்தொடர அனுமதி மறுப்பு; பாஜகவினர் சாலை மறியல்

அதனை தொடர்ந்து கட்சியினர் அளித்த பூர்ண கும்ப மரியாதையை ஏற்றுகொண்ட இருவரும், சிவானந்தா காலனியில் நடைபெறும் கூட்டத்திற்கு காரில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, முக்கிய தலைவர்களின் காரை பின்தொடர்ந்து வந்த, மற்ற கார்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முருகன் காரை பின்தொடர அனுமதி மறுப்பு; பாஜகவினர் சாலை மறியல்

சிறிதுநேர இடைவேளைக்கு பிறகு அவர்களை செல்ல அனுமதித்த போலீசார், மலை அடிவாரத்தில் மீண்டும் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல அனுமதித்தனர்.