பல இடங்களில் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

 

பல இடங்களில் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு பல இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், “தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய வேண்டும். நேர்மையான கொள்கைகளை முன்வைத்து மக்கள் நீதி மய்யம் பிரச்சாரத்தில் ஈடுபடும். மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற்றால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். அரசியல் கூட்டங்களுக்கு அரசு அனுமதி அளித்திருந்தும் பல இடங்களில் அனுமதி அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

பல இடங்களில் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுப்பு: கமல்ஹாசன் குற்றச்சாட்டு!

தேர்தலை எதிர்நோக்கி மக்கள் நீதி மய்யம் கட்சி பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. அரசியல் கூட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிப்பதற்கு முன்னரே, பிரச்சாரத்தை தொடங்கியதால் பல இடங்களில் மைக்கில் பேசுவதற்கு கமல்ஹாசனுக்கு போலீசார் அனுமதி அளிக்காததால் அவர், கையை அசைத்தப் படியே திறந்தவெளி காரில் சென்றார். இதனையடுத்து, 19ம் தேதி முதல் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டும் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக கமல்ஹாசன் குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது கவனிக்கத்தக்கது.