கொரோனா பாதித்த மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுப்பு: கரூர் நீட் தேர்வு மையத்தில்

 

கொரோனா பாதித்த மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுப்பு: கரூர் நீட் தேர்வு மையத்தில்

கரூர் மாவட்டத்தில் இன்று (செப். 13ம் தேதி) நீட் தேர்வு 3 மையங்களில் நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 452 பேர், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 88 பேர் என மொத்தம் 540 பேர். மேலும், அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 1,563 மாணவ, மாணவிகள் என காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா மையத்தில் 960, காரு டையாம்பாளையம் விஎஸ்பி பொறியியல் கல்லூரி மையத்தில் 780, வெண்ணெய்மலை கொங்கு கலை அறிவியல் கல்லூரி மையத்தில் 363 என மொத்தம் 2,103 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்த மாணவர் ஒருவர் காருடையாம்பாளையம் விஎஸ்பி பொறியியல் கல்லூரியில் இன்று நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தார். இவர் தந்தை அண்மையில் உயிரிழந்த நிலையில் அவரது இறப்புக்கு பின் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா பாதித்த மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுப்பு: கரூர் நீட் தேர்வு மையத்தில்

இந்நிலையில் கடந்த இரு நாட்கள் முன் மாணவர் கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டார். நேற்று வந்த பரிசோதனை முடிவில் மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து காருடையாம்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று தொடர்புக்கொண்டபோது, பாதுகாப்பு கவசங்களுடன் மாணவர் வந்தால் தனி அறை தருவதாக உறுதியளித்துள்ளனர்.

இதையடுத்து தேர்வெழுத இன்று தேர்வு மையத்திற்கு வந்த மாணவரை தேர்வு மைய நிர்வாகிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. தேர்வு எழுத அனுமதி மறுப்பதை கடிதமாக வழங்க தேர்வு மைய நிர்வாகத்திடம் மாணவர் கேட்டுள்ளார்.

கொரோனா பாதித்த மாணவருக்கு தேர்வெழுத அனுமதி மறுப்பு: கரூர் நீட் தேர்வு மையத்தில்


தேர்வெழுத மாணவர் வரவில்லை என ஆப்சென்ட் போட்டுவிட்டால் மீண்டும் வாய்ப்பளிக்கும் போது தேர்வெழுத முடியாமல் போய்விடும் என தயங்கிய மாணவர் தொடர்ந்து கடிதம் கேட்டு கல்லூரி முன் காத்திருந்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், வேறொரு நாளில் தேர்வு எழுத தேர்வு மைய நிர்வாகிகள் அனுமதி கடிதம் வழங்கியதை அடுத்து மாணவர் தேர்வு மையத்தில் இருந்து வெள்ளக்கோவில் புறப்பட்டு சென்றார்.