மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரம்!

 

மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி  தீவிரம்!

மதுரையில் டெங்கு காய்ச்சல் அதிகமாகி வரும் நிலையில் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி  தீவிரம்!

மதுரை எஸ் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுவன் திருமலேஷ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தான். 3 நாட்களாக டெங்கு காய்ச்சலால் சிறுவன் திருமலேஷ் அவதிப்பட்டு வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் திருமலேஷின் 9 வயது சகோதரனும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெங்கு காய்ச்சலால் 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி  தீவிரம்!

இந்நிலையில் மதுரையில் டெங்கு காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த நிலையில் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 1,085 பேர் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பணியாளர்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி  தீவிரம்!

மதுரையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை மதுரையில் 20 போ், புகரில் 25 போ் என மொத்தம் 45 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.