தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 27 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

இவ்வாறு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் பரவத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே கொரோனா பீதியில் இருக்கும் மக்களை, டெங்கு காய்ச்சல் பரவல் மிகவும் அச்சமடையச் செய்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், பல இடங்களில் டெங்கு காய்ச்சல் உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெங்கு உள்ளிட்ட நோய்களின் பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.