வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, டெல்லியில் வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாய அமைப்பினர் ஊர்வலமாக சென்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் கலந்துகொண்ட சிலர் பிரதமர் மோடியின் உருவ படத்தை பதாகையால் அடித்தும், காலில் போட்டு மிதித்தும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைதுசெய்தனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அருகில் இருந்த பி.எஸ்.என்.எல் அலுவலகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

இதேபோல் ஈரோட்டில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் முனுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.அப்போது வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.