காரைக்காலில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்காலில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காரைக்கால் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நிலுவை சம்பள தொகையை வழங்க கோரி நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை, அம்மாநில அரசு அமல்படுத்தியது. இதனால் புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கடைகள் இயங்காததால், அதில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கடந்த 38 மாதங்களாக புதுச்சேரி அரசு சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

காரைக்காலில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், நிலுவையிலுள்ள சம்பள தொகையை வழங்க வலியுறுத்தி இன்று, ரேஷன் கடை ஊழியர்கள் காரைக்காலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊழியர்கள் சம்பளம் மற்றும் மாற்று வேலை வழங்கக் கோரி தங்களது வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை கீழே வீசி எறிந்து அரசுக்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.