கோவையில் பாதையை மறைத்து கட்டிய தீண்டாமைச்சுவர் இடித்து அகற்றம்!

 

கோவையில் பாதையை மறைத்து கட்டிய தீண்டாமைச்சுவர் இடித்து அகற்றம்!

கோவை

கோவை பன்னிமடை பகுதியில் அருந்ததியர் சமூக மக்கள் குடியிருப்பின் அருகே அமைக்கப்பட்ட தீண்டாமைச்சுவரை அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் சமீபத்தில் கண்ண பிரான் நகர் என்ற பெயரில் புதிய லேஅவுட் அமைக்கப்பட்டது. இதற்காக அந்த பகுதியில் அருந்ததிய சமூக மக்கள் வசிக்கும் பகுதியையும், அவர்கள் செல்லும் பொது வழித்தடத்தை மறைக்கும் வகையில் பெரிய அளவில் சுற்றுச்சுவர் எழுப்பப் பட்டிருந்தது. தீண்டாமையை கடைபிடிக்கும் விதமாக சுவர் அமைக்கப்பட்டிருப்பதாக அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

கோவையில் பாதையை மறைத்து கட்டிய தீண்டாமைச்சுவர் இடித்து அகற்றம்!

இந்த நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இந்த சுவரை அகற்றக்கோரி, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடமும், ஊராட்சி மன்ற தலைவரிடமும் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதனை தொடர்ந்த, மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று பொதுவழித்தடத்தை அடைத்து கட்டப்பட்டிருந்த அந்த தீண்டாமை சுவரை அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம் இடித்து அகற்றினர். சுவர் இடிப்பை ஒட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.