தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்டுள்ள ஆதி மாரியம்மன் கோவில் இடிப்பு! தற்கொலை மிரட்டலால் பரபரப்பு!

தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்டுள்ள ஆதி மாரியம்மன் கோவில் இடிப்பு! தற்கொலை மிரட்டலால் பரபரப்பு!

தஞ்சாவூர் சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்டுள்ள ஆதி மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து இந்து முன்னணி பிரமுகர் தற்கொலை மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீர் நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. அடிப்படையில் தஞ்சை நாகை சாலையில் உள்ள சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் கோயில்கள் குறித்தே பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது புளியந்தோப்பு கிராமத்தில் 70 வீடுகள் அகற்றப்பட்டன.

தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்டுள்ள ஆதி மாரியம்மன் கோவில் இடிப்பு! தற்கொலை மிரட்டலால் பரபரப்பு!

அந்த கிராமத்தில் உள்ள உயரமான சிவலிங்க வடிவில் ராஜகோபுரத்துடன் ஆதி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலும் சமுத்திரம் ஏரி ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கூறி கோவிலையும் அதன் சுற்றியுள்ள வீடுகளையும் பொதுப்பணித்துறை இடித்தனர் கோயிலை நிர்வகித்து வந்த ராமமூர்த்தி சுவாமிகளின் மனைவி பார்வதி கோவிலை இடிக்க தடை விதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளையில் 2018ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார் சமுத்திரம் ஏரியை ஆக்கிரமித்து 14 ஆயிரம் சதுர அடி பரப்பில் ஆதி மாரியம்மன் கோவிலில் ராமமூர்த்தி சுவாமிகளின் சமாதி வீடு ஆகியவற்றை கட்டப்பட்டுள்ளன என ஐகோர்ட் கிளையில் பொதுப்பணித்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.

தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்டுள்ள ஆதி மாரியம்மன் கோவில் இடிப்பு! தற்கொலை மிரட்டலால் பரபரப்பு!

அதை ஏற்று 10 வாரங்கள் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஆகஸ்ட் மாதம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் காவல்துறை பாதுகாப்புடன் ஆதி மாரியம்மன் கோவிலை இடிக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் தொடங்கினார். மூன்று மண் அள்ளும் எந்திரங்களின் உதவியுடன் கோவில் சுற்று சுவர் அர்த்தமண்டபம் இடிக்கப்பட்டது கோவில் இடிக்கப்படும் தகவல் அறிந்து கோவிலை இடிக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியினர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை சமுத்திரம் ஏரியில் கட்டப்பட்டுள்ள ஆதி மாரியம்மன் கோவில் இடிப்பு! தற்கொலை மிரட்டலால் பரபரப்பு!

அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் கோவிலை இடிப்பதற்கு போதிய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இனிமேல் பணியை நிறுத்தினால் கோர்ட்டு அவமதிப்பு பொதுப்பணித்துறையினர் ஆளாக வேண்டி வரும் நிலையில் கோர்ட்டு உத்தரவுபடி பணியை செய்ய தடுக்கக் கூடாது என அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் இருக்கும்பொழுது இந்து முன்னணி பிரமுகர் முருகன் திடீரென கோவில் முகப்பில் உள்ள கட்டடங்கள் மீது ஏறி கோவிலை இடிக்க கூடாது என முழக்கங்கள் செய்தார் இடித்தால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்தார். உடனடியாக போலீசாரும் அரசு அலுவலர்களும் அவரை சமாதானப்படுத்தி கீழே இறங்க வைத்தனர் இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.