சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இந்தியா? பரபரப்பை ஏற்படுத்தும் ஆய்வறிக்கை

 

சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இந்தியா? பரபரப்பை ஏற்படுத்தும் ஆய்வறிக்கை

கடந்த 2018-ல் உலக அளவில் சிறந்த ஜனநாயக நாடாக 48 வது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது அதனைப் பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்றாக இடம் பிடிக்க காத்திருக்கிறது என ஒரு சர்வே ரிப்போர்ட், ஒட்டு மொத்த உலகத்தையும் பரபரக்க வைத்திருக்கிறது.
சுவீடன் நாட்டின் பிரபலமான “வி-டெம் இன்ஸ்டியூட்” என்ற அமைப்பு 665 வல்லுநர்களைக் கொண்டு 165 நாடுகளில் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன.

சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இந்தியா? பரபரப்பை ஏற்படுத்தும் ஆய்வறிக்கை


ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள கருத்து சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், சமூக மற்றும் கல்வி நிலை, தேர்தல் நடைமுறை உள்ளிட்ட 16 அம்சங்களை முன் வைத்து இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தற்போது ஜனநாயகம் பலவீனமாகி உள்ளது. ஊடக சுதந்திரம் குறைந்து விட்டது. எதிர்கட்சிகளின் கருத்துக்களுக்கு இங்கு மதிப்பில்லை.

சர்வாதிகார நாடுகள் பட்டியலில் இந்தியா? பரபரப்பை ஏற்படுத்தும் ஆய்வறிக்கை

சிவில் சமூகம் வேதனையில் தள்ளப்பட்டு வருகிறது. உலகின் ஜனநாயாகக் குறியீட்டில் இந்தியா 90 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியா ஜனநாயகத்தில் தனது மதிப்பை இழந்து வருவதாகவும், தற்போது அது மிக மோசமான நிலையை தொட்டுக் கொண்டிருக்கிறது ,எனவும் இந்தியா சர்வாதிகார நாடுகளின் பட்டியலுக்கு மிக அருகில் நெருங்கி விட்டதாகவும் அந்த ஆய்வறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.