பாமக,நா.த.,ம.நீ.ம. கோரிக்கை – முதல்வர் எடுத்த முடிவு

 

பாமக,நா.த.,ம.நீ.ம. கோரிக்கை – முதல்வர் எடுத்த முடிவு

உடல்நலன் மற்றும் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிட காவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுப்பு தரவேண்டும். இதை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட எஸ்.பி தவறாமல் செயல்படுத்த வேண்டும் என சுற்றறிக்கை வாயிலாக டிஜிபி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

பாமக,நா.த.,ம.நீ.ம. கோரிக்கை – முதல்வர் எடுத்த முடிவு

இதுகுறித்து நம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘’மக்களுக்கும் காவல்துறையினருக்குமான உறவை மேம்படுத்த, நாம் தமிழர் கட்சி முன்வைத்த காவல்துறை சீர்திருத்தங்களில் ஒன்றான, காவலர்களுக்கு வாராந்திர ஓய்வுத் திட்டத்தை, நடைமுறைப்படுத்தியுள்ள தமிழக முதல்வர் ஐயா மு.க.ஸ்டாலின் மற்றும் ஐயா சைலேந்திர பாபு ஆகியோருக்கு எனது நன்றியும் வாழ்த்துகளும்’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘’தமிழக காவல்துறைக்கு வாரம் ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. காவலர்களுக்கு வார விடுமுறை என்பது பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்த கோரிக்கையாகும்!’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பாமக,நா.த.,ம.நீ.ம. கோரிக்கை – முதல்வர் எடுத்த முடிவு

’’காவலர்களுக்கு 8 மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் பா.ம.க.வின் நீண்ட நாள் கோரிக்கையாகும். அதையும் நிறைவேற்றி காவலர்களின் நலனை பாதுகாக்க தமிழக முதலமைச்சரும், காவல்துறை தலைமை இயக்குனரும் முன்வர வேண்டும்!’’என்கிறார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பாமக,நா.த.,ம.நீ.ம. கோரிக்கை – முதல்வர் எடுத்த முடிவு

’’காவலர்களுக்கு வாரவிடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவுகள் நம்பிக்கையளிக்கின்றன. மகிழ்ச்சியான பணிச்சூழலில் தமிழக காவல்துறை இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழவேண்டும்.’’என்று தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

பாமக,நா.த.,ம.நீ.ம. கோரிக்கை – முதல்வர் எடுத்த முடிவு