“பார்சலை பிரித்து ,பொருளை எடுத்து ….”போனை ஆட்டைய போட்ட அமேசான் ஊழியர்

 

“பார்சலை பிரித்து ,பொருளை எடுத்து ….”போனை ஆட்டைய போட்ட அமேசான் ஊழியர்

அமேசான் நிறுவனத்தில் டெலிவரி வேலை செய்யும் ஒருவர் ,பார்சலை பிரித்து அதிலிருந்த போனை விற்று மோசடி செய்த சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது .


டெல்லியில் கோட்லா முபாரக்பூரில் இருக்கும் காவல் நிலையத்தில் அக்டோபர் 1ம் தேதி ஒருவர் ஒரு புகார் கொடுக்க வந்தார் .அவரின் புகாரில் டெல்லியின் கிட்வாய் நகரில் வசிக்கும் அவர் ஒரு விலையுர்ந்த மொபைல் போனை அமேசானில் ஆர்டர் செய்ததாகவும் ,ஆனால் அதை கொண்டு வந்த டெலிவரி செய்பவர் அந்த போனை எடுத்து விற்றுவிட்டு தன்னை ஏமாற்றியதாகவும் புகாராளித்தார் .
அவரின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் .அப்போது அவர்கள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது . அதன்படி அந்த டெலிவரி ஆள் புதுடெல்லியில் உள்ள கீர்த்தி நகரில் உள்ள ஜவஹர் முகாமில் வசிக்கும்22 வயதான மனோஜ் என அடையாளம் காணப்பட்டார். அவர் தனக்கு பணம் தேவைப்பட்டதால் அன்று அவருக்கு வநத பார்சலை பிரித்து பார்த்துள்ளார் .அப்போது அந்த பார்சலில் விலையுயர்ந்த போன் இருப்பதை பார்த்து அதை ஆட்டைய போட்டு விட்டார் .பிறகு அந்த போனை ஆர்டர் செய்தவரிடம் தங்களின் ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாகவும் ,விரைவில் அமேசான் நிறுவனம் தங்களுக்கு பணத்தை அனுப்பி வைக்குமென்றும் கூறினார் .ஆனால் அவரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட போனை ஆர்டர் செய்த நபர் போலிஸில் புகாரளித்தார் .
அதன்பிறகு தரம்வீரிடமிருந்து விற்கப்பட்ட அந்த மொபைல் போன் மீட்கப்பட்டது.பிறகு குற்றம் சாட்டப்பட்ட மனோஜ் என்பவர் கைது செய்யப்பட்டார் .

“பார்சலை பிரித்து ,பொருளை எடுத்து ….”போனை ஆட்டைய போட்ட அமேசான் ஊழியர்