சீனக்காரங்களுக்கு ரூம் கொடுக்க மாட்டோம்….. டெல்லி ஹோட்டல் சங்கம் அறிவிப்பு…. தீவிரமடையும் சீன எதிர்ப்பு

 

சீனக்காரங்களுக்கு ரூம் கொடுக்க மாட்டோம்….. டெல்லி ஹோட்டல் சங்கம் அறிவிப்பு…. தீவிரமடையும் சீன எதிர்ப்பு

கிழக்கு லாடக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ம் தேதியன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து விரட்டியபோது இரு தரப்பு வீரர்கள் மோதி கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும், சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற உணர்வு நாட்டு மக்களிடம் நிலவுகிறது.

சீனக்காரங்களுக்கு ரூம் கொடுக்க மாட்டோம்….. டெல்லி ஹோட்டல் சங்கம் அறிவிப்பு…. தீவிரமடையும் சீன எதிர்ப்பு

அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) சீன பொருட்களை புறக்கணிக்கும்படி வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குபவர்களை வலியுறுத்தி வருகிறது. மேலும் நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீவிர பிரச்சாரமும் செய்து வருகிறது. சி.ஏ.ஐ.டி.யின் இந்த நடவடிக்கைக்கு தற்போது பலன் கிடைக்க தொடங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் ஹோட்டல் மற்றும் கெஸ்ட் ஹவுஸ்களில் சீன விருந்தினர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என டெல்லியின் ஹோட்டல் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர்கள் சங்கம் (துர்வா) தெரிவித்துள்ளது.

சீனக்காரங்களுக்கு ரூம் கொடுக்க மாட்டோம்….. டெல்லி ஹோட்டல் சங்கம் அறிவிப்பு…. தீவிரமடையும் சீன எதிர்ப்பு

துர்வா இது தொடர்பாக சி.ஐ.ஏ.டி.க்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சி.ஐ.ஏ.டி.யின் பிரச்சாரத்துக்கு நாங்கள் முழு மனதோடு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம் என்பதை உங்களிடம் தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ட்ராண்ட்டுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த சீன பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இனி எங்களது நிறுவனத்தில் சீன பொருட்களை பயன்படுத்த மாட்டோம். மேலும் நமது துணிச்சலான இந்திய படைகள் மீது சீனா பலமுறை தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில், எங்களது ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்ட்ராண்டுகளில் சீனக்காரர்களுக்கு தங்குவதற்கு எந்த அறையும் கொடுக்க கூடாது என முடிவு செய்துள்ளோம் என்பதையும் உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.