டெல்லிக்குப் பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? #IPL #RRvsDC

 

டெல்லிக்குப் பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? #IPL #RRvsDC

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். ஏற்கெனவே இவ்விரு அணிகளும் ஆடிய போட்டியில் 46 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வென்றது. அதற்கு இன்று ராஜஸ்தான் அணி பதிலடி கொடுக்குமா?

டெல்லி கேப்பிட்டஸ் இதுவரை 7 போட்டிகளில் ஆடி 5-ல் வென்று பாயிண்ட் டேபிளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைக்கு டெல்லி வெற்றி பெற்றால் முதல் இடத்துக்கு முன்னேறும்.

டெல்லிக்குப் பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? #IPL #RRvsDC

ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 7 போட்டிகளில் ஆடி, 3-ல் வென்றிருக்கிறது. அதனால், பாயிண்ட் டேபிளில் 7-ம் இடத்தில் உள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால், சென்னை, ஹைதராபாத் அணிகளைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாம் இடத்தைப் பிடிக்கும். எனவே, இன்றைய போட்டியின் வெற்றி டெல்லியை விடவும் ராஜஸ்தானுக்கு ரொம்பவே முக்கியம். அப்படி நடந்தால் தற்போது 6-ம் இடத்தில் உள்ள சென்னை, 7-ம் இடத்திற்கு கீழே இறங்கிவிடும்.

டெல்லிக்குப் பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? #IPL #RRvsDC

டெல்லியின் பேட்டிங் ஆர்டர் செம ஸ்டார்ங். சேவாக் ஆட்டத்தோடு ஒப்பிடப்படுகிற ப்ரிதிவ் ஷாவும் தவானும் நல்ல ஓப்பனர்ஸ். தொடர்ந்து ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட், ஸ்டொயினிஸ், ஹெட்மெயர், ஹர்ஷல் படே என வலுவாக இருக்கிறது. அதிலும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹெட்மெயர் 24 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்ட்ரி என 45 ரன்கள் விளாசினார்.

ஒரே சறுக்கல் தவானும் ரிஷப் பண்டும் தொடக்கத்தில் நிதானித்து ஆடாது அவுட்டாகி விடுகிறார்கள்.

டெல்லிக்குப் பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? #IPL #RRvsDC

பவுலிங்கில் ரபாடாம் அஸ்வின், ஸ்டொயினிஸ், அக்ஸர் பட்டேல், ஹார்ஷல் பட்டேல் என நல்ல டீம் இருக்கிறது.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்த வரை இறுதியாக ஹைதராபாத்தை வென்ற உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

டெல்லிக்குப் பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? #IPL #RRvsDC

ஓப்பனிங் வீரர்களில் சின்ன தடுமாற்றம் இருக்கிறது. பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஜோடி பெரிய அளவில் கைக்கொடுக்க வில்லை. இன்றைய போட்டியில் இதே ஜோடி இறங்கினால் நிலைத்து ஆட வேண்டியது அவசியம். ஸ்மித், சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா ஆடக்கூடியவர்களே. ஆணியின் சுமையைத் தன் மேல் ஏற்றிக்கொள்ளும் ராகுல் திவெட்டியாவே இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் வெல்ல காரணம். ஹைதரபாத் அணியோடு 28 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். அது இன்றும் தொடர்வது அவசியம்.

பவுலிங்கில் ஆர்ச்சர், கோபால், தியாகி, திவெட்டியா, உன்கட் என நல்ல டீம்தான். ஆனால், ரன்களை வாரி வழங்குவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

டெல்லிக்குப் பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? #IPL #RRvsDC

ராஜஸ்தான் வீரர்களை வைத்துப் பார்க்கையில் வலுவான டீம்தான். ஆனால், டீம் வொர்க் சுமார். யாரேனும் ஒருவர் காப்பாற்ற வேண்டியிருக்கிறது. டெல்லி டீம் வொர்க் பக்காவாக இருக்கிறது. எனவே இன்றைக்கு அதற்கே வாய்ப்பிருக்கிறது என்றாலும் பாயிண்ட் டேபிளில் முன்னேற நிச்சயம் ராஜஸ்தான் போராடும்.