பவுலர்களின் ஆட்டமாக மாறிய டெல்லி vs ராஜஸ்தான் போட்டி

 

பவுலர்களின் ஆட்டமாக மாறிய டெல்லி vs ராஜஸ்தான் போட்டி

நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வெல்வது அவசியம் என்பதால் முக்கியமான போட்டியாகப் பார்க்கப்பட்டது.

முதலில் ஆடிய டெல்லி அணியின் அதிரடி பேட்ஸ்மேனை முதல் பந்திலேயே ஆட்டமிழக்கச் செய்தார் ஆர்ச்சர். மிக முக்கியமான விக்கெட். மூன்றாம் ஓவரை வீச வந்த ஆர்ச்சர் ரஹேனா விக்கெட்டை வீழ்த்தினார். இந்த இரண்டு விக்கெட்டுகள் விழுந்ததும், டெல்லி அணிக்கு விக்கெட் விழாமல் ஆட வேண்டிய கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், அதிக வேக ரன்ரேட்டுக்குச் சாத்தியமில்லாமல் செய்தார்கள் ராஜஸ்தான் பவுலர்கள்.

பவுலர்களின் ஆட்டமாக மாறிய டெல்லி vs ராஜஸ்தான் போட்டி

ஆயினும் தவான் – ஸ்ரேயாஸ் கூட்டணி நிலைத்து ஆடியது. அதை கோபால் 12 வது ஓவரில் பிரித்தார். அப்போது தவான் 57 ரன்கள் எடுத்திருந்தார். நன்கு அடித்து ஆடி வந்த தவான் விக்கெட் விழாவிட்டால் ஸ்கோர் 200யை நெருங்கி இருக்கலாம். 16 வது ஓவரில் ஸ்ரேயாஸ் விக்கெட்டை வீழ்த்தினார் தியாகி.

அதற்கு அடுத்து வீசிய ஓவர் ஒவ்வொன்றும் ரன்களைக் கொடுக்காமல் கவனமாக வீசப்பட்டது. 16 ஓவரில் 132 ரன்கள் இருந்தது. 20 ஓவர் முடிவில் 161 ரன்களே. இத்தனைக்கும் களத்தில் ஸ்டொயினிஸ், கேரி இருவரும் இருந்தனர்.

பவுலர்களின் ஆட்டமாக மாறிய டெல்லி vs ராஜஸ்தான் போட்டி

18 வது ஓவரில் இரண்டு டாட் பால்கள் 5 ரன்கள், 19 வது ஓவரில் ஒரு விக்கெட், 5 ரன்கள், 20 வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள், 8 ரன்கள். கடைசி 18 பந்துகளில் 18 ரன்கள்தான் என்பது டி20 போட்டியில் மிகக் குறைவான ரன்களாகும்.

ராஜஸ்தான் பவுலர்களால் பலம் வாய்ந்த டெல்லி 161 எனும் குறைவான ஸ்கோரில் முடங்கியது.

டெல்லியைப் போல பெரும் ஏமாற்றத்தோடு ஆரம்பிக்கவில்லை ராஜஸ்தானுக்கு. ஆனால், 9 பந்துகளில் 22 ரன்கள் விளாசிய பட்லரை மூன்றாம் ஓவரிலேயே வீழ்த்தினார் நோர்ஜெ. எதிர்கொண்ட 4 பந்துகளின் ஸ்டீவ் ஸ்மித்தை திரும்ப அனுப்பினார் அஸ்வின்.

பவுலர்களின் ஆட்டமாக மாறிய டெல்லி vs ராஜஸ்தான் போட்டி

பென் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடினார். அவரோடு சஞ்சு சாம்சன் சேர்ந்துகொண்டார். 10 ஓவர் வரை இவர்களை பிரிக்க முடியவில்லை. ரன்களும் கணிசமாக ஏறியது. துஷ்பர் வீசிய பந்தில் லலித் யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பென் ஸ்டோக்ஸ். அப்போது அணியின் ஸ்கோர் 10.2 ஓவருக்கு 86 ரன்கள். இதே ஆட்டத்தைத் தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி ராஜஸ்தான் வசம் என்றிருந்தது.

ஆனால், அடுத்த இரண்டாம் ஓவரிலேயே அதிரடி பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனை வீழ்த்தினார் அக்ஸர் படேல். சென்ற போட்டியில் நன்கு ஆடிய பராக் விக்கெட் ரன் அவுட்டில் விழுந்தது. ஆயினும் ராஜஸ்தான் வெற்றிமுகம் மாறவில்லை. ஏனெனில் அவர் அவுட்டாகும்போது 13.2 ஓவரில் ஸ்கோர் 110. 40 பந்துகளில் 52 ரன்கள் எனும் எளிதான இலக்கே இருந்தது.

பவுலர்களின் ஆட்டமாக மாறிய டெல்லி vs ராஜஸ்தான் போட்டி

இறங்கியிருப்பது ராகுல் திவெட்டியா. அவர் இறங்கியதும் தூக்கி அடித்தபோது வந்த கேட்ச்சை ராஜஸ்தான் வீரர் துஷார் நழுவ விட்டார். அதனால் வெற்றி நிச்சயம் என்ற நிலையே இருந்தது.

17.3 ஓவரில் நன்கு ஆடிக்கொண்டிருந்த ராபின் உத்தப்பாவை வீழ்த்தினார் நோர்ட்ஜெ. வெற்றி கடினம் என்றாலும் கைவிட்டுச் செல்ல வில்லை.

19 வது ஓவரை வீச வந்தார் ரபாடா. 12 பந்துகளில் 25 ரன்கள் எனும் நிலையில், களத்தில் ராகுல் திவெட்டியா இருக்கையில் அந்த ஓவரில்3 ரன்கள் மட்டுமே கொடுப்பட்டு ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டது. ஆட்டம் டெல்லி பக்கம் வந்தது.

பவுலர்களின் ஆட்டமாக மாறிய டெல்லி vs ராஜஸ்தான் போட்டி

கடைசி ஓவரில் ஒரு விக்கெட், ஒரு டாட் பால், ஒரு ஒய்டு, 7 ரன்களைக் கொடுத்தார் துஷார் தேஷ்பாண்டே. அதனால், 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வென்றது. பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தையும் பிடித்தது.

டி20 போட்டிகள் பேட்ஸ்மேன் கேம் என்றே சொல்லப்படுவது உண்டு. ஆனால், நேற்றைய போட்டியில் பவுலர்களின் ஆதிக்கமே உயர்ந்திருந்தது. நேற்று மட்டுமல்ல, அதற்கு முன்தினத்தில் நடந்த சென்னை vs ஹைதராபாத் போட்டியில்கூட 147 ரன்களுக்குள் சுருட்ட முடிந்ததாலே சென்னை வெல்ல முடிந்தது.