டெல்லி vs மும்பை – ஐபிஎல் கோப்பை யாருக்கு?

 

டெல்லி vs மும்பை – ஐபிஎல் கோப்பை யாருக்கு?

செப்டம்பர் 19-ம் தேதி தொடங்கியது ஐபிஎல் திருவிழா. மொத்தம் 60 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 59 – போட்டிகள் முடிவடைந்துவிட்டன. கடும் பரபரப்புக்கு மத்தியில் இன்று இறுதிப்போட்டி. மோதும் அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இண்டியன்ஸ்.

இந்த சீசனில் அசூர பலத்தோடு எந்த அணியையும் எதிர்கொள்ளும் ஆட்டத்திறனோடு காத்திருக்கிறது மும்பை இண்டியன்ஸ். ரோஹித் ஷர்மா உடல்நலம் தேறி மீண்டும் அணிக்குள் வந்தது பெரிய பலம். அதை எதிர்த்து களம் காணும் டெல்லி அணியும் அதற்கு சளைத்தது அல்ல.

டெல்லி vs மும்பை – ஐபிஎல் கோப்பை யாருக்கு?

இந்த சீசனில் இந்த இரு அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் நடந்திருக்கின்றன. மூன்றிலுமே வென்றது மும்பை. அதுவும் மிகச் சமீபமாக பிளே ஆஃப் சுற்றில் 57 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை ருசித்தது மும்பை.

எனவே இன்றும் மும்பை வெல்வதற்கான வாய்ப்புகளே இருக்கிறது என்பது பலரும் கணிப்பு. ஆயினும், டெல்லி அணி கடும் முயற்சி எடுத்து போராடும் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், இதுவரை ஒருமுறைகூட இறுதிப்போட்டியில்கூட நுழைய வில்லை டெல்லி கேப்பிட்டல்ஸ். அதனால், இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என போராடும்.

டெல்லி vs மும்பை – ஐபிஎல் கோப்பை யாருக்கு?

ஏற்கெனவே 4 முறைகள் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணி மும்பை. அதனால், இறுதிப்போட்டிக்கான வியூகத்தை இந்நேரம் தெளிவாக வகுத்திருக்கும். இம்முறை அது மீண்டும் வென்றால், 5 முறைகள் கோப்பையை வென்ற அணி எனும் சாதனையைப் படைக்கும்.

மாறாக டெல்லி வென்றால், முதன்முதலாக டெல்லி வென்ற கோப்பை எனும் சாதனை இருக்கும். எப்படியாகினும் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.