டெல்லி vs மும்பை – இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது எது?

 

டெல்லி vs மும்பை – இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது எது?

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி இன்று. இன்றைய போட்டியில் மோதப்போவது மும்பை இண்டியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்.

பிளே ஆஃப் சுற்றில் இறுதிப் போட்டிக்கான முதல் தகுதிப் போட்டியில் மும்பையும் டெல்லியும் மோதும் ஆட்டம், நாளை நடக்கிறது. இதில் வெல்லும் அணி, நேரடியாக இறுதிப் போட்டிக்குச் சென்று விடும்.

டெல்லி vs மும்பை – இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது எது?

இன்னொரு போட்டி, 6-ம் தேதி பெங்களூரும் ஹைதராபாத்தும் மோதுகின்றன. இதில் வென்ற அணியும், முதல் தகுதிப் போட்டியில் தோற்ற அணியும் அடுத்ததாக மோதும். அதில் வெல்லும் அணியே இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் இரண்டாம் அணி.

அந்த வகையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும். எனவே, அதிக ரிஸ்க் இல்லாமல் இன்றே வென்றுவிட வேண்டும் என இரு அணிகளும் நினைக்கும்.

மும்பை இண்டியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மோதம் இந்த சீசனில் இரு முறை நடந்திருக்கின்றன. இரண்டிலுமே மும்பைதான் வென்றிருக்கிறது. முதன்முறை டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்தது. ஆனால், 162 ரன்களுக்குள் சுருட்டியது மும்பை அணி. 4 விக்கெட்டுகளைத்தான் டெல்லி இழந்திருந்தாலும் ரன்களைக் குவிக்க முடியவில்லை. மும்பைக்கு இது ஈஸி ஸ்கோர் என்றாலும் 19.4 ஓவர் வரை சென்றே அதால் வெல்ல முடிந்தது.

டெல்லி vs மும்பை – இறுதிப் போட்டிக்குச் செல்லப்போவது எது?

இரண்டாம் மோதலில் மும்பை டாஸ் வென்றாலும், முதலில் டெல்லியையே பேட்டிங் செய்ய வைத்தது. போல்ட், பும்ராவின் வேகப்பந்து வீச்சில் நிலைகுலைந்து போனது டெல்லி. கேப்டன் ஸ்ரேயாஸ் அடித்த 25 ரன்களே அந்த அணி வீரர்களின் அதிகபட்ச ரன். 9 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்களில் அடங்கியது. ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 14.2 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது மும்பை. இஷான் கிஸன் 72 ரன்களை விளாசினார்.

இந்த இரண்டு தோல்விகளிலிருந்து மீள நிச்சயம் டெல்லி முயலும். ரோஹித் ஷர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியது மும்பைக்கு பலமே. களத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அது நிச்சயம் உதவும். ஆனால், தசைப்பிடிப்பால் அவதிபடும் அவரால் நிலைத்து நீண்ட நேரம் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்ய முடியுமா என்பது சந்தேகம்தான்.