முதன்முறையாக டெல்லி மெய்நிகர் நீதிமன்றம் ஆன்லைனில் விவாகரத்து வழங்கியது

 

முதன்முறையாக டெல்லி மெய்நிகர் நீதிமன்றம் ஆன்லைனில் விவாகரத்து வழங்கியது

டெல்லி: முதன்முறையாக டெல்லி மெய்நிகர் நீதிமன்றம் ஆன்லைனில் விவாகரத்து வழங்கியது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசு வழிகாட்டுதல்களுக்கு இணங்க நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நீதிமன்றங்கள் விர்ச்சுவல் (மெய்நிகர்) முறையில் விசாரணையை நடத்தி வருகின்றன. அந்த வகையில், டெல்லியில் ஒரு மெய்நிகர் நீதிமன்றம் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தி ஒரு ஜோடிக்கு விவாகரத்து வழங்கியது. இதனால் முதன்முறையாக ஆன்லைனில் விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக டெல்லி மெய்நிகர் நீதிமன்றம் ஆன்லைனில் விவாகரத்து வழங்கியது

கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு வருடம் கழித்து பிரிந்த தம்பதியினர் பரஸ்பர ஒப்புதல் மூலம் விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தனர். அந்த நபர் மற்றும் அவரது முன்னாள் மனைவி இருவருடனும் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரணை நடத்திய நீதிபதி அவர்களுக்கு மெய்நிகர் முறையில் விவாகரத்தை வழங்கினார். தம்பதியினர் சம்மதத்துடன் கையெழுத்திட்ட மென் நகல்களை  (Soft Copy) நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர்.  டெல்லி நீதிமன்றம் ஜூன் 13 அன்று இ-ஃபைலிங் வசதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் வழக்கறிஞர்கள் ஆன்லைனில் மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.