வடமாநிலத்தில் உருவான இன்னொரு சந்தனக்கட்டை வீரப்பன் – 50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்..

வடமாநிலத்தில் உருவான இன்னொரு சந்தனக்கட்டை வீரப்பன் – 50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்..

தமிழகத்தில் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் ஒரு காலத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக போலீசுக்கு தலைவலியாக இருந்த சந்தனக்கட்டை வீரப்பன் இறப்புக்கு பிறகு ,வட மாநிலத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சந்தனக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்ததை போலீசார் ரெய்டில் பறிமுதல் செய்தனர்

வடமாநிலத்தில் உருவான இன்னொரு சந்தனக்கட்டை வீரப்பன் – 50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்..

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் உள்ள கோட்வாலி நகர போலீசுக்கு ஜூலை 30 ம் தேதி, ஒரு நபர்  தடைசெய்யப்பட்ட சிவப்பு சந்தனக் கட்டை கடத்தலில் ஈடுபட்டுள்ளதாகவும், டெல்லியில் உள்ள காரி மெண்டு பகுதியில் தனது தொழிலை நடத்தி வருவதாகவும் தகவல் கிடைத்தது.
உடனே டெல்லி போலீசும் உத்திரபிரதேச மாநில போலீசும் இணைந்து அதிரடி ரெய்டு நடத்தினார்கள் அப்போது ‘அன்வாரி ஹவேலி’ என்ற இரண்டு மாடி கோடவுன் சோதனை செய்யப்பட்டதில், 145 குவிண்டால் சிவப்பு மற்றும் வெள்ளை சந்தன கட்டைகளை சம்பவ இடத்திலிருந்து மீட்டனர் . இந்த சோதனையில் 3 பேர் இந்த கட்டைகளை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீசின் ரெய்டில் சிக்கிய சந்தன கடைகளின் மதிப்பு சுமார் ரூ .50 கோடி என்றனர் . அவர்கள் பறிமுதல் செய்த சிவப்பு சந்தனம், மற்றும் வெள்ளை சந்தனகட்டைகளின் மொத்த எடை சுமார் 14.5 டன் என்று போலீசார் கூறினார்கள் .
இந்த சந்தன கட்டைகளை கடத்தியவர்கள் கமர் அகமது அன்சாரி மற்றும் அவரது மகன் மொஹமட் ஆகியோர் பிடிபட்டார்கள் .ஆனால் அந்த கட்டைகளை அடுக்கி வைத்திருந்த கோடவுனின் உரிமையாளர்களும், மோசடி கூட்டத்தின் தலைவரான ஷாகிர் பண்டியும் தலைமறைவாக உள்ளார்.
இந்த கடத்தல் செய்தவர்கள் மீது உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் உள்ள கோட்வாலி நகர போலீசார் ஐபிசி பிரிவுகள் மற்றும் வன பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்துள்ளனர் .

வடமாநிலத்தில் உருவான இன்னொரு சந்தனக்கட்டை வீரப்பன் – 50 கோடி மதிப்புள்ள சந்தன கட்டைகள் பறிமுதல்..