டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங்

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங்

ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

9 போட்டிகளில் 7 போட்டிகளின் வென்று 14 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ். ஒவ்வொரு போட்டியிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணியினர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங்

9 போட்டிகளில் 3-ல் மட்டுமே வென்று 6 புள்ளிகளோடு 7-ம் இடத்தில் உள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்தப் போட்டியில் பஞ்சாப் வென்றால், ப்ளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் திறக்கும். ஏனெனில், இனி இருக்கும் ஐந்து போட்டிகளிலும் பஞ்சாப் வென்றால் மொத்தம் 16 புள்ளிகள் கிடைக்கும். அப்போதைய நிலையில் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படலாம்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பேட்டிங்

கிறிஸ் கெயில் அணிக்கு வந்திருப்பது பஞ்சாப்க்கு பெரிய பலமாக இருக்கிறது. எந்த நேரத்திலும் ஆட்டத்தின் முடிவையும் மாற்றிவிடக்கூடிய அற்புத வீரர்.

இன்று டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.