மூன்று மாத சம்பள பாக்கி… டெல்லி டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு!

 

மூன்று மாத சம்பள பாக்கி… டெல்லி டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு!

டெல்லியில் அரசு ரெசிடெண்ட் மருத்துவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு சம்பளம் வழங்காததால், அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று அறிவித்துள்ளனர்.

மூன்று மாத சம்பள பாக்கி… டெல்லி டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு!டெல்லி முனிசிபல் கவுன்சில் கஸ்தூரிபா மருத்துவமனையில் பணியாற்றி வரும் ரெசிடெண்ட் மருத்துவர்களுக்குக் கடந்த மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து மருத்துவர்கள் கேட்டும் அரசு தரப்பிலிருந்து பதில் இல்லை. நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவது சரியாக இருக்காது என்று முடிவு செய்த மருத்துவர்கள் சங்கம், ஒட்டுமொத்தமாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வது என்று முடிவு செய்துள்ளனர். ஜூலை 16ம் தேதிக்குள் சம்பளத்தை வழங்கவில்லை என்றால் டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வது என்று முடிவுவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சுனில் குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மூன்று மாத சம்பள பாக்கி… டெல்லி டாக்டர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு!அதில், “மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட இது சரியான நேரம் இல்லை. எனவே நாங்கள் ராஜினாமா செய்கிறோம். நாங்கள் எங்கள் சேவையை நிறுத்தப்போவது இல்லை. இந்த அரசு மருத்துவமனை எங்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை என்றால், எங்களுக்கு சம்பளம் வழங்கும் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ சேவை அளிப்போம். மக்கள் மருத்துவர்களை கொரோனா போர் வீரர்கள் என்று புகழ்கிறார்கள். கைதட்டுகிறார்கள், மதிக்கிறார்கள். எங்களை மதிக்கும் விதம் இதுதானா என்று அவர்களை கேட்க விரும்புகிறேன். எங்களுக்கு எங்கள் சம்பளம் வேண்டும். டெல்லி மருத்துவர்கள் தங்களுடைய சம்பளத்தைக் கூட பெற முடியவில்லை என்பதை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.