கடுமையான ஊரடங்குக்கு பின் டெல்லியில் 11 சதவீதம் குறைந்த கொரோனா பாதிப்பு!

 

கடுமையான ஊரடங்குக்கு பின் டெல்லியில் 11 சதவீதம் குறைந்த கொரோனா பாதிப்பு!

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் தலைநகர் டெல்லி, மகாராஷ்டிராவில் தான் கோரதாண்டவம் ஆடியது. குறிப்பாக ஏப்ரல் மாதம் ஆரம்பித்ததிலிருந்தே தினசரி கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தைத் தாண்டிச் சென்றது. இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மாநில அரசு திண்டாடியது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் வழங்காததால் பல ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிந்தனர்.

கடுமையான ஊரடங்குக்கு பின் டெல்லியில் 11 சதவீதம் குறைந்த கொரோனா பாதிப்பு!

பிணங்களை அடக்கம் செய்ய முடியாத விரக்தியில் குடும்ப உறுப்பினர்ளின் அவலக் குரல் காதைக் கிழித்தது. டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி அரசையும் மத்திய அரசையும் மிகக் கடுமையாக திட்டி தீர்த்தது. பிச்சை எடுத்தாவது ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என மத்திய அரசிடம் கடுமையாக வலியுறுத்தியது. தலைநகரின் அவலநிலையை மாற்ற பல்வேறு மாநிலங்களும் உதவிக்கரம் நீட்டின. அதேபோல டெல்லியில் கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகியது. நாட்டிலேயே முதல் மாநிலமாக முழு ஊரடங்கை மீண்டும் பிறப்பித்திருந்தது.

கடுமையான ஊரடங்குக்கு பின் டெல்லியில் 11 சதவீதம் குறைந்த கொரோனா பாதிப்பு!

அதன் பலனாக படிபடியாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. தற்போது அங்கு 72 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 சதவீதம் வரை சென்ற பாசிட்டிவ் விகிதமும் குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 8 ஆயிரத்து 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 14 ஆயிரத்து 140 பேர் டிஸ்சார்க் ஆகியிருக்கின்றனர். 289 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இச்சூழலில் ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரம் அளவிற்கு குறைந்திருப்பது ஆறுதல் அளிப்பதாக அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

கடுமையான ஊரடங்குக்கு பின் டெல்லியில் 11 சதவீதம் குறைந்த கொரோனா பாதிப்பு!

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாசிட்டிவிட்டி விகிதம் 11 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இதன்மூலம் டெல்லியில் கொரோனாவின் தீவிரம் குறைந்துவருவது புலப்படுகிறது. வெறும் 15 நாட்களில் ஆயிரம் ஐசியு படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்டன. இதனை சாத்தியமாக்கிய மருத்துவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.