“அடிமை வேலைக்கு அடிமாட்டு விலைக்கு” -ரயில் பெட்டி முழுவதும் கடத்தப்பட்ட சிறுவர்கள்

“அடிமை வேலைக்கு அடிமாட்டு விலைக்கு” -ரயில் பெட்டி முழுவதும் கடத்தப்பட்ட சிறுவர்கள்

ஒரு ரயில் பெட்டியில் கூலி வேலைக்கு கடத்தி செல்லப்பட்ட 14 சிறுவர்களை ரயில்வே போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி மீட்டார்கள்

“அடிமை வேலைக்கு அடிமாட்டு விலைக்கு” -ரயில் பெட்டி முழுவதும் கடத்தப்பட்ட சிறுவர்கள்

பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 14 சிறார்களை செப்டம்பர் 7 ம் தேதி மகானந்தா எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கடத்தி,அவர்களை டெல்லிக்கு கொண்டு சென்று கொண்டிருந்த எம்.டி. அக்பர், எம்.டி. மன்சூர் ஆலம், நசாத், தசுவில், எம்.டி.நசீம், அமன் குமார் சர்மா, நூர் ஆலம், எம்.டி. மெஹ்ராஜ், மஸ்கூர், மகேஷ் லால் கெவத் ஆகியோரை ரயில்வே போலீசார் கைது செய்தார்கள் .

பிறகு போலீசார் அவர்களிடம் விசாரித்த போது ,இப்படி அடிக்கடி சிறுவர்களை தாங்கள் அங்கிருந்து கடத்தி வருவதாகவும் ,அவர்களை தாங்கள் நல்ல விலைக்கு டெல்லியிலுள்ள பெரிய தொழிலதிபர்களிடம் விற்று விடுவதாகவும் ,அவர்கள் இந்த சிறுவர்களை கூலி வேலைக்கும் ,வீட்டு வேலைக்கும் வைத்துக்கொள்வார் களென்றும் கூறினார்கள் .இது பற்றி அறிந்த இன்னும் சிலர் இந்த சிறுவர்களின் கிட்னிகள் கூட சில இடங்களில் திருடப்படுவதாகவும் இதனால் இதன் பாதிப்புகள் தெரியாமலே அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு இப்படி தங்களின் பிள்ளைகளை விற்கிறார்களென்றும் கூறினார்கள் .இந்த கடத்தல் பற்றி பீஹாரிலிருந்து ஒருவர் கொடுத்த துப்பின் அடிப்படையிலேயே போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சிறுவர்களை மீட்டு அவர்களை தனிமையான இடத்திற்கு கொண்டு சென்றார்கள் .பிறகு அவர்களை கடத்தி வந்த அந்த நபர்களை கைது செய்தார்கள் .

“அடிமை வேலைக்கு அடிமாட்டு விலைக்கு” -ரயில் பெட்டி முழுவதும் கடத்தப்பட்ட சிறுவர்கள்