குடியரசு தின வன்முறை திட்டமிடப்பட்ட ‘சர்வதேச சதி’… அதிர்ச்சியூட்டும் டெல்லி போலீஸின் ரிப்போர்ட் – கூகுளுக்கு கடிதம்!

குடியரசு தின வன்முறை திட்டமிடப்பட்ட ‘சர்வதேச சதி’… அதிர்ச்சியூட்டும் டெல்லி போலீஸின் ரிப்போர்ட் – கூகுளுக்கு கடிதம்!

விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. இதனிடையே ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் பேரணி வன்முறையாக மாற்றப்பட்டது குறித்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறது. இந்த விசாரணையில், குடியரசு தின வன்முறை திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என தெரியவந்துள்ளதாக டெல்லி போலீஸ் கூறியுள்ளது. இந்த வன்முறைக்குப் பின்னால் காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் இருக்கலாம் என்று சந்தேகித்திருப்பதால் சர்வதேச அளவில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

குடியரசு தின வன்முறை திட்டமிடப்பட்ட ‘சர்வதேச சதி’… அதிர்ச்சியூட்டும் டெல்லி போலீஸின் ரிப்போர்ட் – கூகுளுக்கு கடிதம்!

இந்த வன்முறைக்கு மூல காரணியாக ட்விட்டரில் பகிரப்பட்ட ‘Toolkit’ இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர். டூல்கிட் என்பது ஒரு விவகாரம் குறித்த முழு தகவல் தொகுப்பும் அடங்கிய ஆவணமாகும். இது ஒரு இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு லிங்காக (Link) பகிரப்படும். மைக்ரோசாப்ட் வேர்டு போன்ற படிவங்களில் பிரச்சினையைக் கோப்பாகத் தயாரித்து மக்களின் ஆதரவைக் கோருவதுடன், அதனைத் தீர்ப்பதற்கான வழிகளையும் கூறும். இதற்கான சேவையைப் பல்வேறு இணையதளங்கள் வழங்குகின்றன. இப்படியான ஒரு டூல்கிட்டை உருவாக்கி தான் திட்டமிட்டு வன்முறை நிகழ்த்தப்பட்டிருப்பதாக டெல்லி போலீஸ் சந்தேகிக்கிறது.

குடியரசு தின வன்முறை திட்டமிடப்பட்ட ‘சர்வதேச சதி’… அதிர்ச்சியூட்டும் டெல்லி போலீஸின் ரிப்போர்ட் – கூகுளுக்கு கடிதம்!

இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டோரின் சமூக வலைதள கணக்குகளை ஆராய்ந்துவருவதாகவும் தெரிவித்துள்ளது. மேற்கூறிய டூல்கிட் சீக்கியர்களுக்கென்று தனி நாடு கோரும் காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. காலிஸ்தான் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தாலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் அந்த இயக்கம் உயிர்ப்புடன் இருக்கவே செய்கிறது. கனடாவிலுள்ள Poetic Justice Foundation என்ற காலிஸ்தான் அமைப்பு தான் இந்த டூல்கிட்டை உருவாக்கியதாக போலீஸ் சந்தேகிக்கிறது. இதற்காக கனடா அரசை நாடவிருப்பதாகக் கூறப்படுகிறது.

குடியரசு தின வன்முறை திட்டமிடப்பட்ட ‘சர்வதேச சதி’… அதிர்ச்சியூட்டும் டெல்லி போலீஸின் ரிப்போர்ட் – கூகுளுக்கு கடிதம்!

இச்சூழலில் இந்த டூல்கிட் எந்த ஐபி முகவரியிலிருந்து (IP address) பதிவேற்றம் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க கூகுள் நிறுவனத்துக்கு டெல்லி போலீஸ் கடிதம் எழுதியிருக்கிறது. இதுதொடர்பாக டெல்லி போலீஸ், “பல்வேறு சமூகம், மதம், கலாச்சார குழுக்களிடையே ஒற்றுமையை வளர்த்து இந்திய அரசுக்கு எதிரான மனநிலையை வார்த்தெடுப்பதே சர்ச்சைக்குரிய டூல்கிட்டை உருவாக்கியவர்களின் நோக்கம். இது இந்தியாவுக்கு எதிராக சமூக கலாச்சாரம் மற்றும் பொருளாதார யுத்தத்தை நடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குடியரசு தின வன்முறை திட்டமிடப்பட்ட ‘சர்வதேச சதி’… அதிர்ச்சியூட்டும் டெல்லி போலீஸின் ரிப்போர்ட் – கூகுளுக்கு கடிதம்!

‘Prior Action’ என்று தலைப்பிடப்பட்ட அந்த டூல்கிட்டில் ஜனவரி 26க்கு முன்னர் ஹேஸ்டேக்குகள் மூலம் ட்விட்டரை ஆக்கிரமிக்க வேண்டும். 26ஆம் தேதியன்று விவசாயிகளின் பேரணியுடன் இணைய வேண்டும். பேரணியோடு டெல்லிக்கு (அனுமதிக்கபடாத பாதை) செல்ல வேண்டும். மீண்டும் டெல்லி எல்லைக்கு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது” என்று கூறியிருக்கிறது. இந்த டூல்கிட்டில் குறிப்பிட்டது போல அப்படியே ஜனவரி 26ஆம் தேதி வன்முறை நிகழ்த்தப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின வன்முறை திட்டமிடப்பட்ட ‘சர்வதேச சதி’… அதிர்ச்சியூட்டும் டெல்லி போலீஸின் ரிப்போர்ட் – கூகுளுக்கு கடிதம்!

இதனைச் சர்வதேச சதியாகப் பார்க்கும் டெல்லி போலீஸ், இது சமூக வலைதளங்கள் வழியாக நிகழ்த்தப்பட்டிருப்பதால் சைபர் பிரிவினர் மூலம் விசாரிக்கப்படும் என்று கூறியிருக்கிறது. ஏற்கனவே சைபர் பிரிவினர் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்டதாகக் கூறி பேஸ்புக், ட்விட்டரில் கணக்குகளை முடக்கி, சம்பந்தப்பட்டவர்களைக் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கின்றனர்.

குடியரசு தின வன்முறை திட்டமிடப்பட்ட ‘சர்வதேச சதி’… அதிர்ச்சியூட்டும் டெல்லி போலீஸின் ரிப்போர்ட் – கூகுளுக்கு கடிதம்!

சமீபத்தில், அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவிலுள்ள ஒரு பூங்காவில் காந்தி சிலை சேதம் செய்யப்பட்டது. இதற்குப் பின்னாலும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தான் இருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில், அதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தான் வாசிங்டனில் காந்தி சிலையைச் சேதப்படுத்தி காலிஸ்தான் கொடியை அதன்மீது போர்த்தியிருந்தார்கள். தொடரும் காந்தி சிலை அவமதிப்பு, செங்கோட்டையில் காலிஸ்தான் ஆதரவு கொடி ஏற்றப்பட்டது, காலிஸ்தான் ஆதரவு பிரச்சாரங்கள் போன்ற விவகாரங்கள் இந்தியாவில் மீண்டும் காலிஸ்தான் இயக்கம் தலையெடுக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.