‘செங்கோட்டையில் மாஸ் காட்டும் விவசாயிகள்’ : டெல்லி போலீசார் வேண்டுகோள்!

 

‘செங்கோட்டையில் மாஸ் காட்டும் விவசாயிகள்’ : டெல்லி போலீசார் வேண்டுகோள்!

விவசாயிகள் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் என டெல்லி போலீசார் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து, குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் மாபெரும் டிராக்டர் பேரணியை தொடங்கினர். டெல்லியின் 5 எல்லைகளில் இருந்து 3 லட்சம் டிராக்டர்களில் டெல்லியை நோக்கி விவசாயிகள் படையெடுத்தனர். ராஜ்பாத்தில் குடியரசு தின விழா நடந்து கொண்டிருந்த போதே, விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்ததால் தடுப்புகளை அமைத்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர்.

‘செங்கோட்டையில் மாஸ் காட்டும் விவசாயிகள்’ : டெல்லி போலீசார் வேண்டுகோள்!

ஆனால், தடுப்புகளை தகர்த்து விவசாயிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், விவசாயிகள் மீது டெல்லி போலீசார் தடியடி நடத்தினர். இருப்பினும், போலீசாரின் தடையை மீறி 500க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் செங்கோட்டைக்குள் நுழைந்து விட்டன. செங்கோட்டையில் வழக்கமாக தேசியக் கொடி ஏற்றப்படும் சிறிய கம்பங்களில் விவசாய சங்கங்களின் கொடியை ஏற்றிய விவசாயிகள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, டெல்லியில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகமும் விவசாயிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விவசாயிகள் சட்டத்தை கையிலெடுக்க வேண்டாம் என டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் செயல்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. விவசாயிகள் பின்வாங்காமல் அங்கேயே இருந்தால், செங்கோட்டையில் கலவரம் நடக்கும் என்ற கருத்து வெகுவாக எழுந்துள்ளது.