ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் கொலை குற்றவாளியா? – லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீஸ்!

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் கொலை குற்றவாளியா? – லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீஸ்!

டெல்லியில் மூத்த மல்யுத்த வீரர்களும் இளம் வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இளம் வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் வென்ற சுஷில் குமாரின் பெயரும் அடிபடுகிறது. அவரும் மோதல் நடந்த இடத்தில் இருந்தார் என்று கூறப்படுகிறது. இச்சூழலில் அவர் வெளிநாடு எங்கும் தப்பிச் செல்ல முடியாத வகையில் டெல்லி காவல் துறை லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பியிருக்கிறது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் கொலை குற்றவாளியா? – லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீஸ்!

கடந்த மே 6ஆம் தேதி டெல்லியிலுள்ள சத்ராசல் அரங்கில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள வாகன நிறுத்துமிடத்தில இளம் மல்யுத்த வீரர்கள் குமார், அஜய், பிரின்ஸ், அமீத், சாகர் குமார் ஆகிய 5 வீரர்களுடன், சுஷில் குமார் உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலர் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அந்த மோதலில் கடுமையாக தாக்கப்பட்ட சாகர் குமார் (23) சம்பவ இடத்தில் இறந்துவிட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சோனு மகால், ஆமீத் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் கொலை குற்றவாளியா? – லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி போலீஸ்!

சம்பவ இடத்திலிருந்த வாகனங்களை சோதனை செய்ததில் ஒரு துப்பாக்கி, ஏராளமான தடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் மூத்த வீரர்கள் பலர் மீது டெல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களில் பிரபல மல்யுத்த வீரரான சுஷில்குமாரும் ஒருவர். தற்போது இவர் தலைமறைவாகியிருப்பதால் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லக் கூடும் என்பதால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இறந்த சாகர் தங்கியிருந்த வீடு மூத்த வீரர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அந்த வீட்டை சாகர் காலி செய்ய மறுத்ததால் ஏற்பட்ட மோதல்தான் கொலையில் முடிந்துவிட்டதாக காவல் துறை விசாரணயில் தெரியவந்துள்ளது.