“உஷார்! வீடியோ கால் பேசும் பெண்களே!” -அதை ஆபாச படமாக மாற்றி ஊடகத்தில் உலவ விடும் கூட்டம் .

 

“உஷார்! வீடியோ கால் பேசும் பெண்களே!” -அதை ஆபாச படமாக மாற்றி ஊடகத்தில் உலவ விடும் கூட்டம் .


பல பெண்களிடம் வீடியோ காலில் பேசி அதை ஆபாச வீடியோவாக மாற்றி பணம் பறித்த கூட்டத்தை போலீசார் கைது செய்தார்கள் .

“உஷார்! வீடியோ கால் பேசும் பெண்களே!” -அதை ஆபாச படமாக மாற்றி ஊடகத்தில் உலவ விடும் கூட்டம் .


ராஜஸ்தான் மாநிலத்தில் மேவாட் பிராந்தியத்தில் உள்ள பாரத்பூர் பகுதியில் ஆறு பேர் சேர்ந்து , நவீன தொழில் நுட்பத்தின் உதவியால் பல குடும்ப பெண்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளார்கள் .அவர்கள் முதலில் சமூக ஊடகத்தில் உள்ள பேஸ் புக் ,இன்ஸ்ட்டாகிராம் ,மற்றும் டிக் டாக் போன்ற சோசியல் மீடியா மூலம் பல பெண்களிடம் நட்போடு பழகுவார்கள் .பிறகு அவர்களை பல பெண்கள் நண்பராக ஏற்றுக்கொண்டதும் ,அந்த பெண்களிடம் வீடியோ காலில் பேசுவார்கள் .அந்த பெண்களும் அவர்களிடம் வீடியோ காலில் பேசுவார்கள் .அப்போது அவர்கள் அந்த பெண்களின் வீடியோ காலை ரெக்கார்ட் செய்துவிடுவார்கள் அதன் பின்னர் அவர்களிடம் இருக்கும் தொழில் நுட்ப உதவியுடன் அந்த பெண்களின் வீடியோவை ஆபாச வீடியோவாக மாற்றி விடுவார்கள் .
அதன் பின்னர் அந்த ஆபாச வீடியோவாக மாற்றப்பட்ட அந்த குடும்ப பெண்களின் வீடியோவை அவர்களுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டுவார்கள் .அந்த வீடியோவை பார்த்த பல பணக்கார வீட்டு பெண்கள் லடச்சக்கணக்கில் அவர்களிடம் பணத்தை கொடுத்து நிம்மதியையும் தொலைத்து விட்டு வாழ்ந்து வருகிறார்கள் .இது போல டெல்லியை சேர்ந்து ஒரு பெண்ணை அவர்கள் ஊடகத்தில் நட்பு கொண்டு இப்படி அவரின் வீடியோவை ஆபாச வீடியோவாக மாற்றினார்கள் .அவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் கூறினார் .சைபர் க்ரைம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்ததில் கடந்த இரு மாதங்களில் 200 க்கும் மேற்பட்ட பெண்களிடமிருந்து புகாரை பெற்றனர் .அதனால் பொலிஸார் அந்த கூட்டத்தை கைது செய்து அவர்களிடமிருந்த 25 லட்ச ரூபாய் பணம் மற்றும் தொழில் நுட்ப கருவிகளை பறிமுதல் செய்தார்கள் .

“உஷார்! வீடியோ கால் பேசும் பெண்களே!” -அதை ஆபாச படமாக மாற்றி ஊடகத்தில் உலவ விடும் கூட்டம் .