மத்திய அரசுடன் முரண்டு பிடித்த ட்விட்டர்… வரிசையாக பாயும் வழக்குகள்!

 

மத்திய அரசுடன் முரண்டு பிடித்த ட்விட்டர்… வரிசையாக பாயும் வழக்குகள்!

ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பிரச்சினையே இன்னும் ஓய்ந்தபாடில்லை. இச்சூழலில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு உரிமை ஆணையம் ட்விட்டருக்கு எதிராக கிளம்பியிருக்கிறது. ட்விட்டரின் இந்திய பிரிவு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் பொய் சொல்வதாகவும், போக்சோ சட்டங்களை மீறியதாகவும் குற்றஞ்சாட்டிருந்தது. ட்விட்டர் இந்தியா மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் டெல்லி காவல் துறையிடம் ஆணையம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

மத்திய அரசுடன் முரண்டு பிடித்த ட்விட்டர்… வரிசையாக பாயும் வழக்குகள்!
மத்திய அரசுடன் முரண்டு பிடித்த ட்விட்டர்… வரிசையாக பாயும் வழக்குகள்!

பேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பானவை பரப்பப்படுவது தொடர்பான வழக்கை ஆணையம் விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இதுதொடர்பாகப் பதிலளிக்க சமூக வலைதளங்களுக்கும் கூகுள் போன்ற வலைதளங்களுக்கும் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ட்விட்டர் இந்தியாவிடம் விசாரணை செய்தபோது, குழந்தைகள் தொடர்பாக ட்விட்டரில் பகிரப்படும் அனைத்திற்கும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ட்விட்டர் நிறுவனமே பொறுப்பு என்று கூறியிருக்கிறது.

மத்திய அரசுடன் முரண்டு பிடித்த ட்விட்டர்… வரிசையாக பாயும் வழக்குகள்!

இதை நம்பிய ஆணையம் மேற்கொண்டு விசாரணையை அமெரிக்க ட்விட்டரிடம் நடத்த முடிவெடுத்துள்ளது. ஆனால் அதற்குப் பிறகு தான் தெரியவந்திருக்கிறது. ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் 10 ஆயிரம் பங்குகளில் 9 ஆயிரத்து 999 பங்குகளை அந்நிறுவனமே வைத்துள்ளது. அதேபோல இந்திய போக்சோ விதிகளை ட்விட்டர் இந்தியா தான் மீறியிருக்கிறது. வேண்டுமென்றே ட்விட்டர் இந்தியா தங்களிடம் பொய் சொல்லிவிட்டது என ஆணையம் கொந்தளித்திருக்கிறது. இதன் காரணமாகவே போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய அரசுடன் முரண்டு பிடித்த ட்விட்டர்… வரிசையாக பாயும் வழக்குகள்!

தற்போது இந்தப் புகாரின் அடிப்படையில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் மீது போக்சோ வழக்கு பாய்ந்துள்ளது. ஐடி சட்டத்தின் கீழும் டெல்லி சைபர் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது ட்விட்டர் இந்தியா மீது தொடுக்கப்பட்ட நான்காவது வழக்காகும். முன்னதாக மத்திய அரசின் புதிய ஐடி சட்ட விதிகளுக்கு உடன்படாததால் சட்டப் பாதுகாப்பை அரசு விலக்கிக் கொண்டது.

இதனால் ட்விட்டரில் யார் சர்ச்சைக்குரிய பதிவிட்டாலும் அதற்கு ட்விட்டரே பொறுப்பு என்றாகிவிட்டது. இதன் காரணமாக வரிசையாக வழக்குகள் பாய்கின்றன. ஏற்கெனவே ட்விட்டர் இந்தியாவின் எம்டி மனிஷ் மகேஸ்வரி மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்தியாவின் மேப்பில் காஷ்மீர், லடாக்கை தூக்கியதாலும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.