Home இந்தியா பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவிலிருந்து குணமடைந்தார் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவிலிருந்து குணமடைந்தார் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு கடந்த 17ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டதுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதையடுத்து அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நிம்மோனியா காய்ச்சல் ஏற்பட்டதால் நுரையீரல் தொற்று தீவிரமடைந்துஆக்சிஜன் ஆதரவில் சத்யேந்தர் ஜெயின் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்

இதனை அடுத்து அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் உடல் நலம் தேறிய அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் நெகடிவ் என முடிவு வந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் இன்று இரவு அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாவட்ட செய்திகள்

Most Popular

முதல்வராக அரியணை ஏறுவதற்கான கால்கோள் விழா! திருச்சியை கருப்பு சிவப்பு கடலாக்குவோம்! உதயநிதி அழைப்பு

திருச்சி சிறுகனூரில் திமுகவின் 11வது மாநில மாட்டுக்கான வேலைகள் நடந்து வந்த வேளையில் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால் மாநாட்டினை சட்டமன்ற தேர்தலுக்கான பொதுகூட்டமாக நடத்துகிறது திமுக. இன்று...

‘நம்ம டார்க்கெட் தமிழ்நாடு’ : அமித் ஷாவின் மாஸ்டர் ப்ளான்!!

பாஜக பிரசார கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று நாகர்கோவில் வருகிறார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில்...

நாங்க பேசினோம்.. ஆனால் அதை பற்றி பேசவில்லை… மிதுன் சக்கரவர்த்தியுடான சந்திப்பு குறித்து பா.ஜ.க. தலைவர்

பிரபல நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடனான சந்திப்பின்போது, அவர் பா.ஜ.க.வில் இணைவது தொடர்பாக பேசவில்லை என்று பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா தெரிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும்.. பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.. விவசாயிகளிம் யோகி வேண்டுகோள்

பேச்சுவார்த்தை நடத்தினால் குழப்பம் போகும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க பிரதமரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி...
TopTamilNews