ஐபிஎல் ஃபைனலில் தோற்றது டெல்லி… ஆனால், சிக்கல் விராட் கோலிக்கு!

 

ஐபிஎல் ஃபைனலில் தோற்றது டெல்லி… ஆனால், சிக்கல் விராட் கோலிக்கு!

ஐபில் திருவிழா கோலகலமாக நடந்து முடிந்திருக்கிறது. கொரோனா அச்சத்தால் வெளிநாட்டுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் 60 ஆட்டங்களும் முடிந்து, நேற்று ஃபைனலில் மும்பை அணியை டெல்லி எதிர்கொண்டது.

முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 156 ரன்களில் சுருண்டது. அடுத்து ஆடிய மும்பை அணி 5 விக்கெட்டுகளும் 8 பந்துகளும் மிச்சமிருக்க வெற்றியை ருசித்தது. ஐபிஎல் கோப்பையையும் தட்டிச் சென்றது.

ஐபிஎல் ஃபைனலில் தோற்றது டெல்லி… ஆனால், சிக்கல் விராட் கோலிக்கு!

மும்பை இண்டியன்ஸ் அணி இதன்மூலம் ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியனாகி யுள்ளது. இது பெரிய சாதனை. இதனை முறியடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மட்டுமே முடியும். ஏனெனில், அது மட்டுமே 3 முறை கோப்பையை வென்றிருக்கிறது.

மும்பை அணியிடம் தோற்றது டெல்லி. ஆனால், சிக்கல் விராட் கோலிக்கு வந்திருக்கிறது. மும்பை அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது கிடைக்காத ஐபிஎல் கோப்பை, ரோஹித் ஷர்மாவால் 5 முறை கிடைத்திருக்கிறது. இதற்கு ரோஹித்தின் கேப்டன்ஷிப்தான் காரணம் என்று அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

ஐபிஎல் ஃபைனலில் தோற்றது டெல்லி… ஆனால், சிக்கல் விராட் கோலிக்கு!

அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் ரோஹித் ஷர்மாவை நியமிக்கச் சொல்லும் குரல்கள் அதிகரித்து வருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், “பேட்டிங்கிலும் கேப்டன்ஷிப்பிலும் அசத்தும் ரோஹித் ஷர்மாவை இன்னும் இந்திய அணியின் கேப்டனாக்காமல் இருப்பது அவமானம்’ என காட்டமாகக் கூறியிருக்கிறார். அவருக்கு ஆதரவாகப் பலரும் கருத்துகள் சொல்லி வருகின்றனர்.

இது விராட் கோலிக்கு பெரும் தலைவலியைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில், எட்டு ஆண்டுகளாக ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்தும் ஒருமுறை முறை கோப்பையை வெல்ல முடியவில்லை விராட் கோலியால். ஆனால், மைதானத்தில் ஒவ்வொரு வீரரையும் அதட்டியும் மிரட்டியும் விளையாட வைப்பார் கோலி.

ஐபிஎல் ஃபைனலில் தோற்றது டெல்லி… ஆனால், சிக்கல் விராட் கோலிக்கு!

நேற்று ரோஹித் ஷர்மா மீடியாவிடம் பேசும்போது, “வீரர்கள் நன்றாக விளையாடியதால் கிடைத்த வெற்றி இது. நான் வீரரை அதட்டி வேலை செய்ய வைக்கும் கேப்டன் இல்லை” என்று எரியும் விஷயத்திற்கு தீயை ஊற்றியிருக்கிறார்.