டெல்லி மருத்துவமனைகளின் முன்பு காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை எல்ஈடி திரையில் அறிவிக்க உத்தரவு!

டெல்லி மருத்துவமனைகளின் முன்பு காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை எல்ஈடி திரையில் அறிவிக்க உத்தரவு!

டெல்லியில் வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று தற்போது இரட்டிப்பு வீதமாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.5 லட்சம் பேராக இருக்கும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

டெல்லி மருத்துவமனைகளின் முன்பு காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை எல்ஈடி திரையில் அறிவிக்க உத்தரவு!

இந்நிலையில் மருத்துவமனைகள் எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பது குறித்து மருத்துவமனை வாயிலில் பெரிய எல் ஈ டி திரையில் அறிவிப்பு செய்ய வேண்டுமென டெல்லி துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனைகள் தங்களிடம் மொத்தமாக எவ்வளவு படுக்கைகள் உள்ளன? அதில் எத்தனை படுக்கைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன? எத்தனை படுக்கைகள் காலியாக உள்ளன என்பன உள்ளிட்ட விவரங்களை மருத்துவமனை வாயிலில் பெரிய எல் ஈ டி திரையில் அறிவிக்க வேண்டுமென துணை நிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.இந்த தகவல்கள் சரியாக தெரிவிக்கப்படுகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கூறியுள்ள ஆளுநர், பொதுமக்களிடம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.