சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோருக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது- டெல்லி உயர்நீதிமன்றம்

 

சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோருக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது- டெல்லி உயர்நீதிமன்றம்

சாலை விபத்தில் தங்களது பிள்ளைகளை இழந்த பெற்றோர்களுக்கு இழப்பீடு பெறும் உரிமை உள்ளது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மோட்டார் விபத்து உரிமைகோரல் தீர்ப்பாயங்களுக்கும் அனுப்பி வைக்குமாறும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டில் சாலை விபத்தில் தங்களது 23 வயது மகனை இழந்த பெற்றோர்கள் தங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு தொகையை 2.42 லட்சத்திலிருந்து 80 6.80 லட்சமாக உயர்த்தி வழங்குமாறு வழக்கு தொடுத்தனர். கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் விபத்து நிகழ்ந்தால், பாதிக்கப்பட்டவரின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க உரிமை இல்லை என மோட்டார் விபத்து சட்டம் கூறுகிறது. மேலும் உயிரிழந்தவரின் தந்தை டெல்லி காவல்துறையில் துணை ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாகவும், எனவே, அவர்கள் இறந்தவரைச் சார்ந்து இருக்கவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோருக்கு இழப்பீடு பெற உரிமை உள்ளது- டெல்லி உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சார்ந்து இருக்கிறார்கள் என்றும், சாலை விபத்தில் தங்கள் மகனை இழந்தவர்களுக்கு இழப்பீடு மறுப்பது சமத்துவமற்றது என்றும் கருத்து தெரிவித்தது. மேலும் விபத்து நடந்த நேரத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சார்ந்து இல்லாவிட்டாலும், அவர்கள் நிச்சயம் நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், வாழ்க்கையின் பிற்பகுதியில் இழந்த குழந்தைகளை நம்பி இருந்திருப்பார்கள் என வழக்கை விசாரித்த நீதிபதி ஜே.ஆர். மிதா கூறினார்.