• March
    31
    Tuesday

Main Area

Main



நிர்பயா வழக்கு குற்றவாளிகளை ஒன்றாகதான் தூக்கிலிட வேண்டும்.... டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு...

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்
நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்து தங்களது தண்டனை நிறைவேற்றுவதை தள்ளிபோட்டு வந்தனர்.
 இந்நிலையில் குற்றவாளிகள் 4 பேரையும்  பிப்ரவரி 1ம் தேதியன்று (நேற்று) தூக்கிலிட நீதிமன்றம் புதிய டெத் வாரண்ட் பிறப்பித்தது. இதிலிருந்தும் தப்பிக்கும் நோக்கில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமார் சர்மா தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தார்.

டெல்லி நீதிமன்றம்

ஆனால், அதனை குடியரசு தலைவர் அதனை நிரகாரித்து விட்டார். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் மற்றொரு குற்றவாளியான அக்சய் தனது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி குடியரசு தலைவருக்கு கருணை மனு தாக்கல் செய்தார். இதன் தொடர்ச்சியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளை அடுத்த உத்தரவு வரும் வரை தூக்கலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மத்திய அரசு டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள்

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 4 பேரும் ஒன்றாகத்தான் தூக்கிலிட வேண்டும். தனித்தனியாக தூக்கிலிடக் கூடாது. குற்றவாளிகள் 4 பேரும் ஒரு வார காலத்துக்குள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து சட்ட தீர்வுகளையும் நாட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
 

2018 TopTamilNews. All rights reserved.