ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான இறப்புகள் குறித்த தரவை மத்திய அரசு இன்னும் கேட்கவில்லை… சர்ச்சையை கிளப்பும் டெல்லி அரசு

ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான இறப்புகள் குறித்த தரவை மத்திய அரசு இன்னும் கேட்கவில்லை… சர்ச்சையை கிளப்பும் டெல்லி அரசு

ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான இறப்புகள் குறித்த தரவை மத்திய அரசு இன்னும் கேட்கவில்லை என்று டெல்லி அரசு கூறியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் டெல்லி உள்பட பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான மக்கள் இறந்ததாக செய்திகள் வெளியாகியது. ஆனால் நாட்டில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்தது. மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் பேசுகையில், கொரோனா உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் குறைத்துக் காட்டுங்கள் என்று மாநிலங்களுக்கு எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.

ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான இறப்புகள் குறித்த தரவை மத்திய அரசு இன்னும் கேட்கவில்லை… சர்ச்சையை கிளப்பும் டெல்லி அரசு
ஆக்சிஜன் சிலிண்டர்கள்

எங்களிடம் இருக்கும் புள்ளிவிவரங்கள் அனைத்தும், மாநில அரசுகள் அனுப்பியவைதான். மாநிலஅரசுகள்தான் கொரோனா உயிரிழப்பை பதிவு செய்துள்ளன. மத்திய அரசின் பணி என்பது அவர்கள் வழங்கும் புள்ளிவிவரங்களைப் பதிவு செய்வதுதான். அவர்கள் கொடுத்த புள்ளிவிவரங்களின்படி ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்தார். ஹரியானா உள்ளிட்ட சில மாநில அரசுகளும் இதனை ஒப்புக்கொண்டன. மத்திய அரசு சொன்னது உண்மைதான், எங்க மாநிலத்தில் யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை என்று சத்தீஸ்கர் சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ தெரிவித்தார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான இறப்புகள் குறித்த தரவை மத்திய அரசு இன்னும் கேட்கவில்லை… சர்ச்சையை கிளப்பும் டெல்லி அரசு
மத்திய அரசு

இந்த சூழ்நிலையில், தற்போது டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பான இறப்புகள் பற்றிய தரவை (புள்ளிவிவரங்களை) கேட்டு மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். சத்யேந்திர ஜெயின் இந்த தகவல் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.