நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

 

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கு பங்கு பரிவர்த்தனையில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பானது. இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இணைக்கப்பட்டுள்ளனர். பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி முதலில் விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரால்டு வெளியீட்டாளரான ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை மாற்றியதில் முறைகேடு நடந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 244ஆவது பிரிவின் கீழ், நிலம் மற்றும் மேம்பாட்டு பிரிவின் துணை அதிகாரியான உச்ச நீதிமன்ற செயலாளர் (பதிவு அதிகாரி), வருமான வரித் துறை துணை ஆணையர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சாட்சிகளை அழைத்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று சுவாமி கோரியிருந்தார். ஆனால், இந்தக் கோரிக்கை குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் என கடந்த 11ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் தெரிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

இந்த மனு நீதிபதி சுரேஷ் கைத் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பான வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்குமாறு விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, சுவாமி மனு மீது வரும் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் வெளியீட்டாளாரான ஏஜெஎல் (The Associated Journals) என்ற நிறுவனத்தை நேரு 1937இல் தொடங்கினார். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாகச் சேர்ந்தனர். இந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் 90 கோடி ரூபாய் கடனளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் நிறுவனத்தின் பங்குகள் சோனியா காந்திக்குச் சொந்தமான யங் இந்தியா நிறுவனத்திற்கு 50 லட்சத்துக்கு கைமாற்றப்பட்டன. யங் இந்தியாவில் 76 சதவீத பங்குகள் சோனியா, ராகுல் ஆகியோரிடமும் 24 சதவீத பங்குகள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்னாண்டஸ் ஆகியோரிடம் இருக்கிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ஏஜெஎல் நிறுவன பங்குதாரர்களின் ஒப்புதலே இல்லாமல் பங்குகளைக் கைமாற்றியதில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சுப்பிரமணிய சுவாமி 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதாவது நிறுவனத்தின் மொத்த பங்குகளின் விலை 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலானது என்றும், கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் அவ்வளவு கோடி விலைப்பெறும் பங்குகளை வெறும் 50 லட்சத்துக்கு யங் இந்தியாவுக்குக் கைமாற்றிப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கை அமலாக்கத் துறையும் கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.