கொரோனாவின் ருத்ரதாண்டவம்… காலவரையின்றி அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு!

 

கொரோனாவின் ருத்ரதாண்டவம்… காலவரையின்றி அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு!

இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது கொரோனா பரவல். கடந்த 24 மணி நேரத்தில் 1.31 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 700க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் இரட்டை உருமாற்றம் அடைந்த கொரோனா பரவியிருப்பதால், அதன் வீரியமும் வேகமும் அதிவேகமாக இருக்கிறது.

கொரோனாவின் ருத்ரதாண்டவம்… காலவரையின்றி அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு!

குறிப்பாக, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தினந்தோறும் பாதிப்பு எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. அதன்படி ஏப்ரல் 30 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இச்சூழலில் டெல்லியுள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி பள்ளிகள் மூடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். டெல்லியில் கட்ந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரத்து 437 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.