டெல்லியில் மதுபானங்களுக்கான கொரோனா வரி நீக்கம்…மாநில எல்லைகள் திறப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மதுபானங்களுக்கான கொரோனா வரி நீக்கம்…மாநில எல்லைகள் திறப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் மதுபானங்களுக்கான கொரோனா வரி நீக்கப்பட்டதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

அனைத்து வகை மதுபானங்களுக்கும் அதிகபட்ச சில்லறை விலையில் 70% வசூலிக்கப்பட்ட சிறப்பு கொரோனா கட்டணம் ஜூன் 10 முதல் நீக்க முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வரி மோசடிகள் அதிகரிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 5 முதல் டெல்லியில் மதுபானத்திற்கு சிறப்பு கொரோனா கட்டணம் விதிக்கப்பட்டது.

டெல்லியில் மதுபானங்களுக்கான கொரோனா வரி நீக்கம்…மாநில எல்லைகள் திறப்பு – அரவிந்த் கெஜ்ரிவால்

மேலும் டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் திறக்கப்படுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கடந்த வாரம் டெல்லி எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில், டெல்லி எல்லைகள் நாளை முதல் மாநிலங்களுக்கு இடையேயான இயக்கத்திற்கு திறக்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.